ethanai inbam

எத்தனை இன்பம் - சிறுவர் பாடல்

Let's have a fun time at the carnival with this nursery rhyme!

- Abhi Krish

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

குபு குபு வண்டி! குபு குபு வண்டி!

குடு குடு என்று ஓடியதே!

எனக்கும் உனக்கும் எத்தனை இன்பம்?

செல்லக் கைகள் துடித்தனவே!

குதிரை சவாரி! குதிரை சவாரி!

ஜிங் - ஜக் என்று மிதந்ததே!

எனக்கும் உனக்கும் எத்தனை இன்பம்?

ஆடக் கால்கள் துடித்தனவே!

ராட்டினப் பெட்டி! ராட்டினப் பெட்டி!

கட- முட என்று சுற்றியதே!

எனக்கும் உனக்கும் எத்தனை இன்பம்?

காணக் கண்கள் துடித்தனவே!

சுற்றுலா சென்று ஆட்டங்கள் ஆடி

கொண்டாட்டத்தோடு மகிழ்ந்தோமே!

எனக்கும் உனக்கும் எத்தனை இன்பம்?

மீண்டும் செல்லத் துடித்தோமே!