இரண்டு கரும்புள்ளி வண்டுகளுக்கு
எத்தனை கால்கள் இருக்கும்?
நான்கு பறவைகளுக்கு
எத்தனை இறக்கைகள் இருக்கும்?
மூன்று காண்டாமிருகங்களுக்கு
எத்தனை கொம்புகள் இருக்கும்?
ஐந்து யானைகளுக்கு
எத்தனை தும்பிக்கைகள் இருக்கும்?
ஏழு நாய்களுக்கு எத்தனை காதுகள் இருக்கும்?
மூன்று குரங்குகளுக்கு
எத்தனை வால்கள் இருக்கும்?
ஆறு பூனைகளுக்கு எத்தனை கண்கள் இருக்கும்?
ஒரு புழுவிற்கு
எத்தனை கால்கள் இருக்கும்?