forest

வனச் சுற்றுலா

animals

- myfirstschool international

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஒரு  நாள்  காட்டிற்கு  ஆசிரியர்களும் , மாணவர்களும் விலங்குகளையும், பறவைகளையும்  பற்றி  தெரிந்து கொள்ளுவதற்காக சென்றனர்.

காட்டிற்குள் சென்றதும் முதலில் பறவைகளையும்,பறவைகளின் ஒலியையும்  கேட்டு வியப்புற்றனர்.

சோலைகளின் இடையில் அதில்   வண்டுகள்  ரீங்காரமிட்டன.இனிமையாக  இருக்கிறது  என்பதை கண்களை மூடிக்கொண்டு ஒரு சிறுமி  இரசித்து உணர்ந்தாள்.

சற்று தொலவில்  மயில்  தோகையை  விரித்துக் கொண்டு நடனமாடியது  கண்களைக்  கவரும்படியாக  இருந்தது.

இக்காட்சிகளைக் கண்டு கொண்டே  விலங்குகளைப் பார்க்க செல்லும்போது கைகளைக் கோர்த்துக் கொண்டு சென்றனர்.

அவர்களோடு வந்த  வனவிலங்கு பாதுகாப்பாளர் புலியைப் பற்றிக் கூறினார்.

மாணவிகள் ஆவலோடு  கேட்டனர்

ஒரு பெரிய உருவம் தெரிந்தது  என்னவென்று பார்த்தால் மிகப்பெரிய யானை

அவர்களைப் பார்த்துப் பிளிறியது.உடனே  யானையின் அருகில் சென்று  பார்த்து மகிழ்ச்சியுற்றனர்.

தான் கண்டு களித்த காட்சிகளை மகிழ்ச்சியுடன் தன் பாட்டியிடம் கூறினாள்.