friends

நண்பர்கள்

நண்பர்களுடன் கால்பந்து விளையாட்டு.

- R. Saravanan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

இவர்கள் நால்வரும் வேறுபட்ட தெருக்களை சேர்ந்தவர்கள்.பள்ளி முடிதந்தவுடன்

மாலையில்  ஒன்று சேர்ந்து விளையாடுவார்கள்.இவர்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு கால்பந்து தான். மிக நன்றாக விளையாடுவார்கள்.

ஒரு நாள் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. நால்வரும் விளையாடுவதற்கு வரவில்லை. வீட்டில் படித்துகொண்டிருந்தார்கள்.

மறு நாள் பலத்த மழையின் காரணமாக பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த கொட்டும் மழையிலும் மாணவர்கள் மகிழ்ச்சியாக விளையாடினார்கள். இந்த மாணவர்களுக்கு தண்ணீர்‍, மழை என்றால் மிகவும் பிடிக்கும்.

மறுநாள் இந்த மாணவர்களுக்கு கடுமையான காய்ச்சல் அடித்தது.எனவே மழையில் நனைந்து விளையாடுவதை தவிர்த்தனர்.