gorillavin party

கொரில்லாவின் பார்ட்டி

கொரில்லா ஒரு பார்ட்டிக்குத் தயார் ஆகிக்கொண்டிருக்கிறாள். சரி, ஒரு பார்ட்டி என்றால் என்னவெல்லாம் வேண்டும்? தொப்பிகள், நிறைய நிறைய தொப்பிகள்! கொரில்லாவுடன் சேர்ந்து நீங்களும் பார்ட்டி தொப்பிகளை வீடு முழுவதும் வைக்கலாம், வாருங்கள்! குழந்தைகளுக்கு இடம் சார்ந்த திசையுணர்வை அறிமுகப்படுத்தும் ஒரு குதூகலமான புத்தகம் இது.

- Subhashini Annamalai

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

என்னுடைய நண்பர்கள் ஒரு பார்ட்டிக்காக இங்கே வருகிறார்கள். நான் பார்ட்டி தொப்பிகளை அங்கங்கே வைத்துக் கொண்டிருக்கிறேன்.

இதை புத்தக அலமாரியின் மேலே வைப்போம்...

இதை விளக்கின் பின்னால்.

சுவையான ஜூஸ் நிறைந்த இரண்டு டம்ளர்களின் நடுவில் ஒன்றை வைத்துவிடுவோம்.

மற்றொன்று நாற்காலியின் அடியில் இருக்கட்டும்.

இந்தப் பெரிய கேக்கின் இடது புறம் ஒன்று.

வலது புறம் மற்றொன்று.

எனது நண்பன் வௌவாலுக்காக ஒன்றை தலைகீழாகத் தொங்க விட்டுவிடலாம்.

டொக்!

டொக்!

ஓஹோ, எல்லோரும் ஆளுக்கொரு தொப்பியோடுதான் வந்திருக்கிறார்கள்!

தொப்பி எங்கே இருக்கிறது?

சிலசமயம், ஒரு பொருளின் இருப்பிடத்தை வேறு பொருட்களுடன் தொடர்புபடுத்திக் குறிப்பிட நாம் சில வார்த்தைகளை பயன்படுத்துவோம். அத்தகைய வார்த்தைகள் நமக்கு இடம்சார்ந்த திசைகளை விளக்குகின்றன. உதாரணமாக, உங்கள் அம்மாவோ அப்பாவோ அவர்களுடைய கைபேசியைத் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், நீங்கள் அது ஃபிரிஜ்ஜின் மேல் (ஆஹா, அது எப்படி அங்கே சென்றது?) இருப்பதை பார்த்துவிட்டர்கள் என்றால், இந்த வார்த்தைகளின் உதவியுடன் நீங்கள் அவர்களிடம் சரியான இடத்தைத் தெரிவிக்க முடியும்.

இந்தக் கதையில், கொரில்லா, பார்ட்டி தொப்பிகளை வெவ்வேறு இடங்களில் வைக்கிறாள். அவள் தொப்பிகளை வைக்கும் இடங்களைத் துல்லியமாகக் குறிப்பிட அடியில், பின்னால், இடையில் போன்ற வார்த்தைகள் நமக்கு உதவுகின்றன. உங்களால் அறையில் இருந்த எல்லா பார்ட்டி தொப்பிகளையும் கண்டுபிடிக்க முடிந்ததா? இதோ, இந்த இடம்சார்ந்த வார்த்தைகளின் உதவியுடன் தொப்பிகளை வைப்பதற்கான வேறு புதிய இடங்களை நீங்களே தேர்ந்தெடுங்கள் பார்க்கலாம். மேலே, அடுத்து, உள்ளே, முன், பின்.