குண்டு கரடிக்குட்டி மிங்-மிங் ரொம்பவே சுட்டி.ஒருநாள் காலையில் எழுந்தபோது ஒரு முடி மட்டும் நின்றது நேராய்!
கரடிக்கு நிறைய முடிகள் உண்டு நேராய் நிற்கும் முடியோ அரிது!
அம்மா கரடி சிங்-சிங் வந்து அதிசயம் இதுதான் என்றது பார்த்து.
“மிங்-மிங் உனக்கு என்னதான் ஆச்சு. தங்கமே முடியேன் இப்படிப் போச்சு?”
ஒற்றை முடியோ மரம்போல் நிற்க, “எத்தனை தைரியம் இதுக்கு?” என்றது.
உடைசல் நாற்காலியில் ஏறிய மிங்-மிங் கண்ணாடியிலே தன்னைப் பார்த்தது.
அக்கா கரடி டிங்-டிங் மெதுவாய் ஆக்கிட நினைத்தது முடியை அழகாய்.
பூவை அதிலே சொருகிடப் பார்க்க,மிங்-மிங் “ம்ஹூம் வேண்டாம்” என்றது.
இன்னொரு முடியை மேலே இழுத்து, “இந்தா உனக்கொரு ஜோடி” என்றது.
அண்ணா கரடி பிங்-பாங் வந்தது முடியைச் சுற்றி இழுத்துப் பார்த்தது.
டெலிபோன் கரடி ட்ரிங்-ட்ரிங் வந்தது ஆன்டெனா வைக்க அனுமதி கேட்டது.
கடுப்பாய் ஆன மிங்-மிங் சொன்னது “வேண்டாமப்பா கிளம்பிடு இப்போ!”
பளபளவென்று மினுமினுவென்ற வண்ணம் பூசிட வேண்டும் என்று,
டிஸ்கோ கரடி ஜிங்-ஜாங் வந்தது. மிங்-மிங் மறுத்து விலகிச் சென்றது.
பயில்வான் டிங்-டாங் ரொம்பவே நெட்டை ஒற்றை முடியைச் சொன்னது நொட்டை.
“ஊரே முறைத்துப் பார்த்திடும் இதனை அடிக்கலாம் வா, உனக்கொரு மொட்டை!”
“அங்கே இங்கே நின்றால் என்ன? முடியென்றால் இப்படி நிக்கணும்தானே!”
மிங்-மிங் குண்டு கரடிக்குட்டிக்கு அந்த முடியை பிடிச்சுப் போச்சு.
அதனைப் பார்த்து ஆசைப்பட்ட அண்ணா கரடியும் அக்கா கரடியும்,
நிற்கும் முடிதான் வேண்டும் என்றனர். அங்கும் இங்கும் எண்ணெயைத் தடவினர்.
மிங்-மிங் மகிழ்வாய் குகையில் தூங்க சூரியன் வந்து மறுநாள் விடிந்தது.
எழுந்த மிங்-மிங் தேடிப் பார்த்தது, நின்ற முடியைக் காணோம், அய்யோ!