hashim maangaygalai paathugaakiraan

ஹஷீம் மாங்காய்களை பாதுகாக்கிறான்

கோடைக்காலம் வந்துவிட்டால் ஹஷீம் நிறைய மாங்காய்களைச் சாப்பிட விரும்புவான். ஆனால் மாங்காய்கள் கெட்டுப்போகப் பார்க்கின்றனவே! இப்போது ஹஷீம் என்ன செய்வான்?

- S. Jayaraman

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஹஷீமுக்கு மாங்காய்கள் பிடிக்கும். இந்தக் கோடையில், மாங்காய்கள் கெட்டுப்போகும் நிலைமையில் உள்ளன. ஹஷீம் அவற்றைப் பாதுகாக்க விரும்புகிறான்.

மாங்காயிலிருந்து நீரை எடுத்துவிட்டால் அது கெட்டுப்போகாது என்று அப்பா ஹஷீமுக்குச் சொல்கிறார்.

“கிருமிகளால் நீர் இல்லாமல் வாழ முடியாது” என்கிறார்.

“மாங்காயிலிருந்து நீரை எடுப்பது எப்படி?” என்று கேட்கிறான் ஹஷீம்.

“அதில் உப்பைச் சேர்!” என்கிறார் அப்பா.

பின்னர், அப்பாவும் ஹஷீமும் மாங்காய்களை வெயிலில் காய வைக்கிறார்கள்.

அவர்கள் அந்த மாங்காய்களை ஒரு கண்ணாடி புட்டியில் போட்டு கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வைக்கிறார்கள்.

எண்ணெய் காற்றிலிருக்கும் கிருமிகளை மாங்காய்களிடம் அணுகவிடாது.

“அப்பா! ஊறுகாயை நாமே செய்துவிட்டோம்!” என்கிறான் ஹஷீம்.

நமக்கு விருப்பமான பழங்கள் மற்றும் காய்கறிகளை எவ்வாறு பதப்படுத்திப் பாதுகாப்பது?

உருளைக்கிழங்கு துண்டு + கொதிக்க வைப்பது + உலர்த்துவது = உருளைக்கிழங்கு வற்றல் (வறுத்துச் சாப்பிட வேண்டும்)

ஆப்பிள் (அல்லது ஏதாவதொரு பழம்) + சர்க்கரை + எலுமிச்சை + சமைப்பது = ஜாம்

தக்காளி + உப்பு + வெயில் + எண்ணெய் = வெயிலில் உலர்ந்த தக்காளி

எலுமிச்சை + உப்பு = பதப்படுத்தப்பட்ட எலுமிச்சை