ராமு ஒருநாள் பட்டம் விட்டுக் கொண்டிருந்தான்.அவன் பட்டம் விடுவதை கவனித்துக் கொண்டிருந்தார் அப்பா.
திடீரென பட்டம் பறந்துவிட்டது.அச்சச்சோ! அவன் பட்டத்தைப் பிடிக்க ஓடுகிறான்.
அவன் சிறுவனாயிற்றே! எங்காவது விழுந்துவிட்டாள் என்னாவது என அவனின் அப்பா அவன் பின்னே ஓடுகிறார்.
என்னாவாயிற்று! அப்பாவும், மகனும் ஏன்? இப்படி ஓடுகின்றனர் என அம்மாவும் பின் தொடர்ந்து ஓடுகின்றனர்.
அம்மா ஓடுவதைப் பார்த்து தங்கையும் ஓடுகிறாள். அதனைக் கவனித்த அக்கா
ஏன் அனைவரும் இப்படி ஓடுகின்றனர்.
அவளும் பதறிக்கொண்டே வேகமாக பின்தொடர்ந்து ஓடுகிறாள்.
அக்கா ஓடுவதைப்பார்த்து மாமாவும் எங்கே செல்கிறார்கள் அனைவரும் என்று அவரும் ஓடுகிறார்.
ஒட்டு மொத்த குடும்பமும் அவன் குட்டையில் விழாமல் தடுப்பதற்காக அவனை நில் என்று சொல்கின்றனர்.
ஹாஹா! அவனோ! அனைவரின் மீதும் சேற்றை அள்ளி வீசிவிட்டு பட்டத்தைப் பிடித்துக்கொண்டான். ஐய்யா! என் பட்டத்தைப் பிடித்துவிட்டேன். பாவம் அனைவரின் முகத்திலும் சேற்றை பூசிவிட்டான்.
கடைசியில் அவனது பட்டத்தோடும்,அவன் வளர்க்கும் பூனை மற்றும் நாயோடும் பட்டம் விட்டு மகிழ்ந்தான்