சிட்டுக்குருவி அந்த பசுவிடம் , எனக்கு பசிக்கிறது ? இங்கு உண்பதற்கு எதாவது கிடைக்குமா! என்றது.அதற்கு அந்த பசு சற்று தூரம் சென்று பார் என்றது.
அங்கு ஒரு பெரிய தோட்டம் இருந்தது. அதனுள் நுழையும் முன், அங்கிருந்த தோட்டக்காரன் என்னிடம் கோபமாக பேசுகிறானே! என்னால் பசியைத்தாங்க முடியவில்லையே!
எறும்பு அண்ணா! இங்கு உண்ண எதாவது கிடைக்குமா! அந்த தோட்டத்தில் பழங்கள் இருக்கிறது. ஆனால் , தோட்டக்காரன் என்னை விரட்டிவிட்டான் என்றது. அவன் அப்படித்தான் விடு. கொஞ்ச தூரம் சென்று பார்.
எலியாரே! உங்களிடத்தில் உண்ண எதாவது உள்ளதா? எனக்கு பசிக்கிறது.
அய்யோ நான் இப்பொழுது தான் இருந்த தானியங்களை தின்று முடித்தேன்.நீ
வேறு யாரிடமாவது கேட்டுப்பார்.
பூனையே! அருகில் எங்காவது பழங்க்கள் இல்லையானால், தானியங்கள் கிடைக்குமா! ம்ம்ம்ம் இன்னும் சற்று தூரம் செல் என்றது.
பாவம் ,அந்த குருவி எறும்பு சொன்னது மட்டும் தான் நினைவில் வருகிறது
நான் இவ்வளவு தேடியும் எதுவும் கிடைக்கவில்லையே! அருகில் உண்ண உணவு கிடைக்கும் என்று எறும்பு அண்ணா சொன்னாரே!
ஆஹா! குருவியை விட உயரமாக செல்லும் காக்கை ஒன்று குருவியின் பசியை உணர்ந்து ஒரு கொய்யாவை அருகில் போட்டது.அதனை உண்ட பிரகு தான் ,குருவியின் சோர்வு நீங்கியது.
பிறகு,மீனவரிடத்தில் மீனை வாங்கி உண்ணலாம் என சென்றது.அவனோ துரத்திவிட்டான்.
மீண்டும் அந்த தோட்டதிற்கு வந்தது. தோட்டக்காரனின் மகன் அந்தக்குருவிக்கு
சில பழங்களைக்கொடுத்தான்.அதனைப்பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக அங்கிருந்து புறப்பட்டது.
குருவியின் பசியைத்தீர்த்த சிறுவனை நினைத்துகொண்டே பறவைகளோடு பறவையாய் பறந்தது.