i am big or small

நான் பெரியவனா? அல்லது சிறியவனா?

கதையின் கருத்தை மாற்றவில்லை.

- Hema Elango

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

அக்கா, நான் இந்த மிதிவண்டியை ஓட்டவா? என்று கேட்டேன்.

நீ மிதிவண்டி ஓட்ட முடியாது. என்றாள் அக்கா. நீ ரொம்ப சிறியவன், என்றாள்.

அக்கா, அந்த குழாயை அடித்து தண்ணீர் நிரப்பவா? என்று கேட்டேன்.

முடியாது என்றார் அக்கா. நீ பெரியவன் ஆனதும் அந்த குழாயைப் பயன்படுத்தலாம் என்றார்.

நான் உங்களுக்கு காய்கறிகள் வெட்டி தரவா? என்று கேட்டேன்.

வேண்டாம்! என்றார் அம்மா. கத்தியைப் பயன்படுத்தும் வயதில்லை என்று கூறிவிட்டார்.

அம்மா, எனக்கு இந்த உணவை ஊட்டிவிடுகிறீர்களா? என்று கேட்டேன்.

நீயே சாப்பிடு! நீ பெரிய பையன். என்றார் அம்மா.

நான் இந்த சுவரில் சாயம் பூசவா? என்று கேட்டேன்.

நீ ரொம்ப சிறியவன். என்றார் அப்பா.

அப்பா, எனக்கு இந்த காலனியை போட்டுவிடுகீறீர்களா? என்று கேட்டேன்.

நீ பெரிய பையன். நீயே போட்டுக் கொள். என்றார்  அப்பா.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை! நான் பெரியவனா? அல்லது சிறியவனா?

ஒருநாள், அம்மாவின் தோடு கட்டிலுக்கு அடியில் இருந்ததைக் கண்டேன்.

என் குழந்தை மிகவும் புத்திசாலி! என்றார் அம்மா.

அனைவரும், நீ பெரியவனாகி விட்டாய் என்று என்னைப் பாராட்டினார்கள்.

ஆனால், நான் பெரியவனா? அல்லது சிறியவனா? குழப்பமாக உள்ளதே! ஹம்ம்ம்ம்ம்