முன்னொரு காலத்தில், Hooter என்ற ஒரு ஆந்தை இருந்தது.
Hooter க்கு நண்பர்கள் இல்லை.
அதனால் Hooter தன் வீட்டீர்க்கு அருகில் உள்ள விலங்குகளிடம் தன்னுடைய நண்பராக இருக்க கேட்டது.
முதலில் Hooter மயிலிடம் சென்றது.
Hooter மயிலிடம் "Hi"
என்றது.
மயிலும் "hi" என்றது.
"நீ என்னுடைய நண்பனாக இருப்பாயா" என்று Hooter கேட்டது.
"உனக்கு என்னை போல வண்ணமுள்ள சிறகுகள் இல்லை. நான் உன் நண்பனாக இருக்க முடியாது" என்று மயில் சொன்னது.
பின்னர் Hooter பல பறவைகளை
சந்தித்தது.
கோழி குஞ்சு "நீ மிகவும் பெரிதாக இருக்கிறாய்"
என்றது.
மைனா "உன் கண்கள் மிகவும் பெரியதாக இருக்கின்றன. எனக்கு பயமாக இருக்கிறது" என்றது.
நாரை "உன் கால்கள் மிகவும் சிறிதாக இருக்கின்றன. நீ என் நண்பனாக முடியாது." என்றது.
Hooter வருந்தியது.
Hooter நாயிடம் "நீ என்னுடைய நண்பனாக இருப்பாயா?" என்று கேட்டது.
அதற்கு நாய் "உனக்கு சிறகுகள் உள்ளன. உனக்கு நான்கு காலகள் இல்லை. நீ என் நண்பனாக முடியாது." என்றது.
Hooter சோகமாக வீட்டிற்கு சென்றது.
இரவு நேரம் ஆனது.
திடீர் என்று Hooter க்கு கூப்பாடு கேட்டது.
கூப்பாடு வந்த திசையை நோக்கி Hooter சென்றது.
இன்னொரு ஆந்தை ஒரு மரத்தின் மேல் இருப்பதை பார்த்தது.
Hooter ஆச்சர்யத்துடன் கேட்டது "யார் நீ? இதற்கு முன் உன்னை இங்கு பார்த்தது இல்லையே?"
ஆந்தை சொன்னது "என் பெயர் Hootey. ஒரு புயலினால் நான் இங்கு திசை மாறி வந்துவிட்டேன். என் வீட்டிற்கு வழி தெரியவில்லை".
Hooter Hootey க்கு உதவி செய்ய நினைத்தது.
"நீ என்னுடைய வீட்டில் தங்கலாம். நாம் இருவரும் சேர்ந்து இருக்கலாம்" என்றது.
Hootey மகிழ்ந்தது. "உன்னுடைய உதவிக்கு நன்றி. நீ தான் உண்மையான நண்பன். ஒரு நண்பனை போல் எனக்கு உதவுகிறாய் . நாம் நண்பர்களாக இருப்போமா?" என்று கேட்டது.
Hooter மிகவும் சந்தோஷ பட்டது.
Hooter ம் Hootey ம் மிக நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.
THE END