ரஞ்சனி வண்ணம் தீட்ட ஆரம்பித்தாள்.
"சூரியன் மஞ்சள் நிறம் தானே" வியந்தார் அம்மா.
"இது அதிகாலை சூரியன் அம்மா" பதில் சொன்னாள் ரஞ்சனி.
ரஞ்சனி இலைகளுக்கு பழுப்பு நிறம் தீட்டினாள்.
"இலை பச்சை நிறம் அல்லவா?" வியந்தார் அம்மா.
"ஆனால் இது காய்ந்த இலை, சருகு அம்மா".
"அம்மா இங்க பாருங்க! அழகான பூக்கள்"
"நம்ம வீட்டு பூக்கள் சிவப்பு நிறம் ரஞ்சனி" என்றார் அம்மா.
"ஆனால் என் பள்ளியில் இருக்கும் பூக்கள் மஞ்சள் நிறம் அம்மா".
ரஞ்சனி வானத்திற்கு சாம்பல் வண்ணம் தீட்டினாள்.
"வானம் நீல நிறம் ரஞ்சனி" என்றார் அம்மா.
"இது இரவு வானம் அம்மா"
ரஞ்சனி ஆப்பிள் பழத்திற்கு வண்ணம் தீட்டிக் கொண்டிருந்தாள்.
"ஆப்பிள் சிவப்பு நிறமல்லவா?" என்றார் அம்மா.
"இது பழுக்காத ஆப்பிள் காய் அம்மா"
"காய் புளிக்கும் ரஞ்சனி"
"கவலைப் படாதீங்க அம்மா. உங்களுக்கு இனிப்பான ஆப்பிள்" என்றாள் ரஞ்சனி.