அம்மா: என்ன ஒரு அழகான நாள்! எழுந்திரு நிக்கோலஸ்.
நான்: வணக்கம் சூரியனே! வணக்கம் பறவைகளே!
அப்பா: இது அழகான நாள். இன்று நாம் அனைவரும் ஆற்றங்கரை போகலாம்.
கழுதை: என்னை மறந்து விடாதே! எனக்கு வெளியே சுற்ற ரொம்ப பிடிக்கும்.
நண்பன் ஜார்ஜ்: அப்படியானால் எங்கள் பின்னாலே வா !
நாய்: எனக்கும் வர ஆசை.
நிக்கோலஸ்: என்னுடன் வா. அந்த மரத்தை, ஓடிப் போய் தொடுவோம்.
கழுதை: நான் ஜெயிச்சுட்டேன் ! நான் ஜெயிச்சுட்டேன் !
நிக்கோலஸ்: என்னைப் பார். இப்படி பண்ண முடியுமா உன்னால்?
ஜேக்கப்: நிச்சயமா அந்த குரங்கு மாதிரி உன்னால செய்ய முடியாது.
அப்பா: இனிமையா நேரத்தை கழிக்க இது தான் சிறந்த இடம்.
ஜேக்கப்: வா, ஏரிக்கு யார் முதலில் போகிறார்கள் என்று பார்ப்போம்.
அம்மா: வாங்க பசங்களா, சாப்பிடலாம்!
அம்மா: வீட்டுக்கு செல்ல நேரம் ஆகிவிட்டது. ஜேக்கப்பிடம் சொல்லிவிட்டு வா.