இந்த வாசனை… என்ன வாசனை இது?
ம்ம்ம்ம்ம்ம்…
ஹரி மாமா கொண்டு போகும் புதுப் பாலின் வாசனையா?
டிடா வெத்தலை போடும்போது அதில் வைக்கும் ஏலக்காயின் மணமா?
சுக்கு தா செய்யும் கருப்பட்டி வெல்லத்தின் வாசனையா?
அபு ஜெத்தா விற்கும் நல்ல சோற்றின் மணமா?
இந்த வாசனை… என்ன வாசனை இது?
எங்கிருந்து வருகிறது இந்த வாசனை?
அட! இது பாயாசம்!
அம்மா பாயாசம் செய்கிறார்!
சுர்ர்ர்ர், சர்ர்ர்ர்!
ம்ம்ம்ம்ம்ம்…