இது பெக்கூ.
கண்ணாடியில் தெரிவது நான்.
இதை செய்யத்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
பெக்கூவிற்கு அதை செய்யப் பிடிக்கும்.
இது என் விருப்பமான இடம். அது பெக்கூவின் இடம்.
பெக்கூ எலியைப் பார்த்துவிட்டால் அதைத் துரத்தி ஓடுவாள்.
ஆனால், நான் எலியைப் பார்த்துவிட்டால் விலகி ஓடுவேன்.
நான் பீப் சத்தத்துடன் நகரும் என் காரின் பின்னே ஓடினால், பெக்கூ திறந்த கதவின்வழியே ஓடிவிடுவாள்.
அம்மா, எங்களுக்கு கொடுக்கும் பாலை ’ஸ்ரூப், ஸ்ரூப்’ என்று குடிப்போம். அப்புறம் ’ஏவ் ஏவ்’ என்று சத்தமாக ஏப்பம் விடுவோம்.
எங்கள் விருப்பங்கள் வெவ்வேறே ஆனாலும்
எங்கள் பொதுவான விருப்பம் பால் ஒன்றே.
என்றைக்கும் மாறாது அது ஒன்றே.