பென்னும் டபோவும் பசியோடு இருக்கும் இரண்டு பையன்கள்.
பாட்டி பத்து கப் கேக்குகள் தயாரிக்கிறார். அவர் அவைகளை தட்டில் வைக்கிறார்.
பென் ஒரு கப் கேக் எடுக்கிறான். டபோ இரண்டு கப் கேக்குகள் எடுக்கிறான்.
பென் நான்கு கப் கேக்குகள் எடுக்கிறான்.
டபோ இரண்டு கப் கேக்குகள் எடுக்கிறான்.
பென் எத்தனை கப் கேக்குகள் சாப்பிட்டான்?
டபோ எத்தனை கப் கேக்குகள் சாப்பிட்டான்?
பாட்டிக்கு எத்தனை கப் கேக்குகள் மிச்சம் இருந்தன?