ஜாசுவுக்கு கால்பந்து விளையாட பிடித்திருந்தது.
ஆனால் அவள் பந்தை தொலைத்துவிட்டாள்!
பழைய காலுறைகள், காகிதம் தூண்டு , நூல் ஆகியவற்றைத் தேடினாள்.
அவள் ஒரு பந்து செய்தாள்.
ஜாசு அவள் செல்லும் இடமெல்லாம் தன் பந்தை உதைத்தாள்.
ஜாசு தன் தாத்தாவைப் பார்க்கச் சென்றாள்.
அவள் பந்தை அவரது மாமரத்தில் உதைத்தாள். சில மாம்பழங்கள் விழுந்தன.
தாத்தாவிற்கு அது பிடிக்கவில்லை. ஜாசுவை கவனமாக இருக்கச் சொன்னார்.
ஜாசு மன்னிப்பு கேட்டாள்
ஜாசு அம்மாவுடன் சந்தைக்குப் போனாள்.
அவள் பந்தை உதைத்தாள்.
அது தக்காளி கூடைக்குள் விழுந்தது.
தக்காளிகள் தரையில் விழுந்தன!
மாமா ஜாசுவை விளையாட வேண்டாம் என்று கூறினார்.
ஜாசு மீண்டும் மன்னிப்பு கேட்டாள்.
ஜாசு தன் பந்தை வீட்டிற்கு கொண்டு சென்றாள்.
வீட்டில் ஜாசு தனது தோழிகளுடன் விளையாட்டு மைதானத்திற்கு சென்றாள். அவர்கள் மகிழ்ச்சியாக விளையாடினார்கள்.
ஜாசு பாதுகாப்பான இடத்தில் விளையாடுகிறாள் என்று தாத்தா சந்தோஷப்பட்டார். அவர் ஜாசுவுக்கு ஒரு நல்ல புதிய பந்தை வாங்கினார்.
தினமும் மாலையில், அக்கம் பக்கத்து குழந்தைகள் விளையாட்டு மைதானத்தில் விளையாட கூடினர்.
ஜாசு தனது நண்பர்களுடன் புதிய பந்தை உதைப்பதை விரும்புகிறாள்...
...ஆனால் ஜாசு அவளுடைய பழைய பந்தை விரும்பினாள்.