journey of a wing

ஒரு சிறகின் பயணம்..!

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் கனெட்டிகட் மாகாணத்தில் இயங்கி வரும் “சிறகு தமிழ்ப் பள்ளி” மாணவர்கள் (நிலை -2) மின்னூல் உருவாக்கும் ஒரு முன்னெடுப்பிற்காக முதல் முயற்சியாக உருவாக்கம் பெற்றுள்ள மின்னூல்.

- Anbu Ramaiyan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

நாங்கள் அமெரிக்காவின் கனெட்டிகட் மாகாணத்தில், ராக்கி ஹில் நகரில் இயங்கும் சிறகு தமிழ்ப் பள்ளி மாணவர்கள். கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் முன் தோன்றிய செம்மொழியான தமிழ் மொழியை இங்கு தான் கற்று வருகிறோம். இந்த மின்னூல் எங்கள் மொழி அறிவு வளர்ச்சியில் ஒரு சிறிய புத்தாக்க முயற்சி.

இது எங்கள் வகுப்பு - நிலை 2 ! நாங்கள் மொத்தம் ஆறு மாணவர்கள் இருக்கிறோம். எங்கள் பெயர் - ஷ்ரவண் கார்த்திக் ராஜராஜன், ஆஹனா ரவிவர்மன், ஸ்ரீலேகா மணியன், இலக்கியா தமிழரசன், அம்ருத்தா ஆனந்த் மற்றும் சர்வேஷ் சத்தியமூர்த்தி. நாங்கள் உலக தமிழ்க் கல்விக் கழக  பாடத்திட்டத்தின் படி தமிழ் பயின்று வருகிறோம். எங்கள் ஆசிரியர் பெயர் திரு. அன்பு ராமையன்.

இது நாங்கள் செய்த முதல் திட்டப் பணி. ”எனக்குப் பிடித்த பழம்” அல்லது “எனக்குப் பிடித்தப் பண்டிகை” என்ற தலைப்பில் நாங்கள் திட்டப் பணி செய்தோம். படம் வரைவதும், ஒட்டுவதும், தகவல் திரட்டுவதும் எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது.

இவை நாங்கள் வரைந்த படங்கள்.. :)

வகுப்பில் “வரைந்து விளித்தல்" விளையாடும் போது நாங்கள் ஒவ்வொருவரும் வரைந்து, சக அணியினர் கண்டுபிடிப்பது தான் இந்த விளையாட்டு..!

ஒவ்வொரு வகுப்பிலும் இப்படி நிறைய புதுச்சொற்களும், அதன் ஆங்கில் விளக்கமும் கற்று வருகிறோம்.

இதன் மூலம் எங்கள் பயன்பாட்டு சொல் வங்கியில் சொற்கள் நிறைவதால் எங்களுக்கு இயல்பாக பேச்சுத் தமிழ் தடையின்றி சரளமாக வருகிறது.