நான் மாமரத்தில் வசிக்கிறேன். கோடைக்காலங்களில் நிறையப் பழுத்த மாம்பழங்களைச் சாப்பிடுவேன்.
என் குஞ்சுகள் கூட்டில் இருக்கும்போது, அவர்களுக்குப் பாதுகாப்பாக நான் இருக்க வேண்டும்.
வாங்க... என் கூட்டினை எட்டிப் பாருங்கள். நான் கொண்டு வந்திருக்கும் அழகான பொருட்களைப் பாருங்கள்.
விமானம் போல, ஆகாயத்தின் மேலே பறக்க எனக்கு ஆசை.
மரத்தின் மீது அமர்ந்து, ஏதேனும் சுவையான உணவு உள்ளதா என அங்கும் இங்கும் சுற்றி பார்ப்பேன்.
என் வடப்பக்கம் பார்ப்பேன். என் இடப்பக்கமும் பார்ப்பேன்.
எனக்கு மீன் ரொம்ப பிடிக்கும். அதைக் கண்டதும், அதை எடுக்கக் கீழே பறந்து செல்வேன்.
கிடைத்த ருசியான மீனைப் பகிர்ந்து கொள்ள, கா..கா.. எனக் கரைந்து என் நண்பர்களை அழைப்பேன்.
"கத்தும் பறைவையே, போ.. போ.." என என்னைப் பார்த்து சிலர் கத்துவார்கள்.
நான் பாடுவது திருவாளர் நரிக்கு ரொம்ப பிடிக்கும். அவரே என்னிடம் இதைச் சொன்னார்.
புதிய சொற்கள் சிலவற்றைத் தெரிந்து கொள்வோம்.
ஒவ்வொரு விலங்கு அல்லது பறவை எழுப்பும் ஒலிக்கு ஒரு சிறப்புப் பெயர் உண்டு. இவற்றில் எத்தனை உங்களுக்குத் தெரியும்?
காகம் கரையும். பூனை சீறும்.
சிங்கம் முழங்கும்.
நாய் குரைக்கும்.
காகங்கள் கா..கா... எனக் கரைந்து அதிக இரைச்சல் ஏற்படுத்தும். எனவே சிலர் சத்தமாகப் பேசும் போது, "காகம் போலக் கத்துகிறாய்" எனச் சொல்வோம்.