காடு கண் திறக்கும்போது
Vishal Raja
உற்சாக முழக்கத்தோடு கதிரவன் துள்ளி எழ, ஒரு புத்தம் புதிய நாளை காடு கண் திறந்து வரவேற்கிறது. ஒரு புத்தம் புதிய நிகழ்ச்சியை அது அரங்கேற்றுகிறது. இன்று காடு எப்படி இருக்கும்? கோண்ட் எனும் பழங்குடி மக்களின் நம்பிக்கையான ஆன்மவாதத்தில் (animism) உந்துதல் பெற்று இக்கதை எழுதப்பட்டுள்ளது. கதிரவனில் தொடங்கி மரம், செடி, பாறை முதலிய அனைத்துப் பொருட்களுக்கும் மனிதர்களைப் போலவே உயிர் கொண்டிருப்பவை என்பதே அந்த நம்பிக்கையின் சாரமாகும்.