kaakkaavum munniyum punjaabin naattuppurakkathai

காக்காவும் முன்னியும்: பஞ்சாபின் நாட்டுப்புறக்கதை

கொடிய காகமான "காக்கா"வுக்கு, அறிவாளிச் சிட்டுக்குருவியான "முன்னி"யின் முட்டைகளைச் சாப்பிட ஆசை. பஞ்சாபின் நாட்டுப்புறக்கதையில் முன்னியும் மற்ற கதைமாந்தர்களும் மிகவும் அறிவாளிகள்.

- இராஜ் குமார்

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

பஞ்சாபில் கோதுமை வயல்களின் அருகில் ஒரு செங்கொன்றை மரத்தில் முன்னி என்ற ஒரு சிட்டுக்குருவி தன் கூட்டில் முட்டைகளை அடைகாத்துக் கொண்டிருந்தது. முன்னி தன்னைச் சுற்றிய சிவப்பு மலர்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு கரிய உருவம் வந்தது. அது காக்கா என்ற கொடுமைக்காரக் காகம்.

"நகர்ந்துடு முன்னி, நான் உன் முட்டைகளைச் சாப்பிடணும்" என்று கட்டளை இட்டது. அறிவாளியான முன்னி உடனே, "நீ சொல்லி மறுக்க முடியுமா, காக்கா? ஆனால், ஒரு வேண்டுகோள். முட்டைகளைத் தின்னும் முன் உன் அலகைக் கழுவிவிட்டு வா. ரொம்ப அழுக்காக இருக்கிறது" என்றது.

தான் அழகாக இல்லை என்ற எண்ணம் காக்காவைத் தொற்றிக் கொள்ள, உடனே ஆற்றுக்குச் சென்று அலகைக் கழுவ நினைத்த போது, ஆறு கத்தியது, "காக்கா, இரு! நீ அலகை என்னில் முக்கினால், என் நீர் அழுக்காகிவிடும். ஒரு குவளையில் நீரை அள்ளிக் கழுவிக்கொள்!" என்றது.

காக்கா குயவரிடம் சென்று கரைந்தது, "குயவன் ஐயா, நான் தான் காக்கா.ஒரு குவளை செய்துத் தாங்க,ஆற்று நீரை நிரப்புவேன்ங்க,அதில் மூக்கைக் கழுவுவேன்ங்க,குருவி முட்டை சாப்பிடுவேன்ங்க,அப்புறம் என்னைப் போல் அழகிய காகமுண்டா என்று கத்திக் கரைவேன்ங்க!"குயவன் சொன்னார், "கண்டிப்பாக் குவளை செய்து தருகிறேன். ஆனால் அதைச் செய்ய களிமண்ணைக் கொண்டு வாயேன்".

பக்கத்தில் உள்ள வயலுக்குச் சென்று சொன்னது,

"வயலே வயலே,  காக்கா நானே,

மண்ணைக் கொஞ்சம் தாங்க,

குயவர் அதைவைத்துக்

செய்து தரும் குவளையில்ஆற்று நீரை நிரப்புவேன்ங்க,

அதில் மூக்கைக் கழுவுவேன்ங்க,

குருவி முட்டை சாப்பிடுவேன்ங்க,

அப்புறம் என்னைப் போல்

அழகிய காகமுண்டா என்று

கத்திக் கரைவேன்ங்க!"

வயல் பதிலளித்தது, "பருவமழை தொடங்காமல், நானே காய்ந்து போயிருக்கேன். ஏதாச்சும் கூரான பொருளைக் கொண்டுவந்து என்னைத் தோண்டிக் கொள்க",

பக்கத்துக் காட்டுக்குச் சென்று கூரிய கொம்பை உடைய மானைப் பார்த்துக் கேட்டது, "மான் அண்ணே, காக்கா நானே,கொம்பைக் கொஞ்சம் தாங்க,வயலில் மண்ணை எடுப்பேன்ங்க,

குயவர் அதைவைத்துக்

செய்து தரும் குவளையில்

ஆற்று நீரை நிரப்புவேன்ங்க,

அதில் மூக்கைக் கழுவுவேன்ங்க,

குருவி முட்டை சாப்பிடுவேன்ங்க,

அப்புறம் என்னைப் போல்

அழகிய காகமுண்டா என்று

கத்திக் கரைவேன்ங்க!""நான் உயிருடன் இருக்கும் போது கொம்பை எப்படி எடுப்பீங்க" என்றது மான். காக்கா பறந்து சென்றது.

இரு வேட்டை நாய்களைக் கண்டது,

"நாய் அண்ணே, காக்கா நானே,மானை நீங்க கொல்லுங்க

அதன் கொம்பை உடைப்பேன்ங்க,

வயலில் மண்ணை எடுப்பேன்ங்க,

குயவர் அதைவைத்துக்

செய்து தரும் குவளையில்

ஆற்று நீரை நிரப்புவேன்ங்க,

அதில் மூக்கைக் கழுவுவேன்ங்க,

குருவி முட்டை சாப்பிடுவேன்ங்க,

அப்புறம் என்னைப் போல்

அழகிய காகமுண்டா என்று

கத்திக் கரைவேன்ங்க!""சூடு எங்களைக் களைப்பாக்கியதே", புலம்பியது நாய், "எங்களுக்குச் சக்தி தர, கொஞ்சம் பாலைக் குடிக்க ஏற்பாடு செய்க".

நாய்கள் குடிக்கப் பாலைத் தாங்க, நாய்கள் மானைக் கொல்லுங்க

அதன் கொம்பை உடைப்பேன்ங்க,

வயலில் மண்ணை எடுப்பேன்ங்க,

குயவர் அதைவைத்துக்

செய்து தரும் குவளையில்

ஆற்று நீரை நிரப்புவேன்ங்க,

அதில் மூக்கைக் கழுவுவேன்ங்க,

குருவி முட்டை சாப்பிடுவேன்ங்க,

அப்புறம் என்னைப் போல்

அழகிய காகமுண்டா என்று

கத்திக் கரைவேன்ங்க!""பச்சைப் புல்லைக் கொண்டு வந்தால் தரேன்" என்றது எருமை.

புல்வெளிக்குக் காக்கா சென்று கெஞ்சிக் கரைந்தது,

"புல்வெளி கண்ணே, காக்கா நானே,புல்லை எருமை சாப்பிடும்ங்க,நாய்கள் குடிக்கப் பாலைத் தாங்க,

நாய்கள் மானைக் கொல்லுங்க

அதன் கொம்பை உடைப்பேன்ங்க,

வயலில் மண்ணை எடுப்பேன்ங்க,

குயவர் அதைவைத்துக்

செய்து தரும் குவளையில்

ஆற்று நீரை நிரப்புவேன்ங்க,

அதில் மூக்கைக் கழுவுவேன்ங்க,

குருவி முட்டை சாப்பிடுவேன்ங்க,

அப்புறம் என்னைப் போல்

அழகிய காகமுண்டா என்று

கத்திக் கரைவேன்ங்க!"

"சரிப்பா, எப்படிப் புல்லை வெட்டுவே!", கேட்டது புல்வெளி, "ஒரு அரிவாளைக் கொல்லரிடமிருந்து வாங்கி வந்தால், புல்லைத் தருகிறேன்" என்றது.

பெரும்பசியுடன் கொல்லரிடம் சென்ற காக்கா, "கொல்லர் அண்ணே, புல்லறுக்கும் அரிவாள் தாங்க,புல்லை எருமை சாப்பிடும்ங்க,

நாய்கள் குடிக்கப் பாலைத் தாங்க,

நாய்கள் மானைக் கொல்லுங்க

அதன் கொம்பை உடைப்பேன்ங்க,

வயலில் மண்ணை எடுப்பேன்ங்க,

குயவர் அதைவைத்துக்

செய்து தரும் குவளையில்

ஆற்று நீரை நிரப்புவேன்ங்க,

அதில் மூக்கைக் கழுவுவேன்ங்க,

குருவி முட்டை சாப்பிடுவேன்ங்க,

அப்புறம் என்னைப் போல்

அழகிய காகமுண்டா என்று

கத்திக் கரைவேன்ங்க!"

மற்ற எல்லோரையும் போன்றே, அந்த கொல்லருக்கும் முன்னியின் முட்டைகளைக் காக்காவிடமிருந்து காக்கும் நோக்கம் இருந்தது.

எனவே, காக்காவிடம், "காக்கா, உலையின் பின்புறம் போய், உலைக்கதவைத் திறந்து, ஒரு இரும்புத் துண்டை அதில் போடு" என்றார்.

பசியில் தவித்த காக்கா அவசரத்தில், வேகவேகமாக உலையின் கதவைத் திறந்தது. திடீரென வீசிய காற்று, காக்காவை நிலை தடுமாற வைத்து எரியும் கரியில் விழ பின்னோக்கி வைத்தது. "வால் போச்சே, வால் போச்சே" என்று கத்திக்கொண்டே காக்கா பறந்து சென்றது!

பேரழகுடன் திகழ மிகவும் விரும்பிய காக்காவால் தன் எரிந்து போன வாலைப் பார்க்க இயலவில்லை என்பதால் பறந்து சென்றது. அதனை அதன் பின்னர் யாரும் பார்க்கவே இல்லையாம்.

கொல்லாஜ் (Collage) என்றால் என்ன?இந்நூலில் நீங்கள் பார்த்த படங்கள் யாவுமே கொல்லாஜ் ஆகும். படத்தில் பல சிறு பாகங்களை ஒன்றிணைத்துச் செய்வதே கொல்லாஜ். இதற்குக் கைகளால் வரைந்த காகிதங்களோ, அச்சிடப்பட்ட புத்தகங்கள், செய்தித்தாள்கள், பழைய அழைப்பிதழ்கள், வாழ்த்திதழ்கள், புகைப்படங்கள், ரிப்பன்கள், காய்ந்த இலைகள் மற்றும் பூக்கள், அல்லது வேறேதும் பொருட்களையோ கூடப் பயன்படுத்தலாம்.

கொல்லாஜ் என்ற சொல் பிரெஞ்சுச் சொல்லான கொல் (Colle) என்ற சொல்லில் பிறந்தது. பிரெஞ்சில் "கொல்" என்றால் பசை என்று பொருள். கொல்லாஜ் செய்ய, ஒரு கத்திரிக்கோளும், நிறைய பசையும் கொண்டு பல பொருட்களைத் திறன்வாய்ந்த விரல்களால் ஒட்ட வைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக இப்பக்கத்திலுள்ள படத்தில் 4 பாகங்கள் உள்ளன: சூரியன், பூமி, நீர், வான்வெளி. இவை இப்புத்தகத்தில் இருக்கும் துண்டுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. நீங்களும் இப்படி கொல்லாஜ்  செய்து பழகலாமே!