kaanaamal pona bat

காணாமல் போன பாட்

ரஹ்மான் சாச்சாவின் சேகரிப்பு கிடங்கிலிருந்து ஒரு பாட் காணாமல் போய்விட்டது. அவருக்கு ஆமீரின் மகன் அஹ்மத் மீதுதான் சந்தேகம். விலோ மரங்களின் மாநிலமான காஷ்மீரிலிருந்து ஒரு வேடிக்கையான கதை!

- Rajam Anand

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

இந்தியாவில் பெருமளவில் கிரிக்கெட் பாட் செய்யும் மாநிலங்களில் ஜம்மூ காஷ்மீரும் ஒன்று. இம்மாநிலத்தின் தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து முப்பத்திஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சங்கம் என்ற சிறு நகரத்தில்தான் இந்த கதை நிகழ்ந்தது.

அளவு கடந்த விலோ மரங்கள் வளரும் இவ்வூரில் இருநூறுக்கும் மேற்பட்ட பாட் செய்யும் தொழில்சாலைகள் இருந்தன.

ரஹ்மான் சாச்சாவின் தொழிற்சாலை இவற்றில் ஒன்று. அவரது தொழிற்சாலையைச் சுற்றி எங்கு பார்த்தாலும் வரிசையாக அடுக்கப்பட்ட கிரிக்கெட் பாட்களைப் பார்க்கலாம்.

உலகின் மிகக்சிறந்த பாட்கள் செய்யத் தகுந்த விலோ மரங்களிலிருந்து அங்கு செய்யப்பட்டன. சங்கம் நகரில் செல்லும் சாலையின் இருபுறமும் விலோ மரங்கள் சீராக வளர்ந்திருந்தன. இன்னும் சொல்லப்போனால் கஷ்மீரில் எங்கு சென்றாலும் விலோ மரங்களைக் காணலாம்.

வயது முதிர்ந்த, கூனல் விழுந்த ரஹ்மான் சாச்சா தன்னுடய வேலையின் பொருட்டு அங்குமிங்கும் பரபரப்பாக அலைந்து கொண்டிருப்பார்.

எப்போதும் சிடுசிடு என்றிருக்கும் அவர், எங்கு போவதற்க்கும் கைத்தடியின் தூண்ணயைத் தேடுவார்.

ஆமிர், ரஹ்மான் சாச்சாவிடம் வேலை பார்த்து வந்தார். அவர் மகன் அஹ்மத் தினந்தோறும் பள்ளிக்கூடம் முடிந்ததும், தொழிற்சாலைக்கு வந்து விடுவான். உயரமாக அடுக்கப்பட்ட பாட்களின் வரிசையை வியப்புடன் பார்த்துக்கொண்டேயிருப்பான்.

பல மாலை நேரங்களில் பாட்களின் பின்னே சிறிது மறைந்து காணப்படும் நிலவைப் பார்த்து மகிழ்வதோடு, பாட் வரிசையின் மேலே ஏறினால் நிலவைத் தொட முடியுமா என்றும் வியப்பான்.

ஆமிர் இயந்திரத்தில் செதுக்கிய பாட்டை எடுத்து விரல்களால் தடவிப் பார்ப்பான், அஹ்மத். அதன் கைப்பிடியைப் பற்றிக்கொண்டு, யை வளைத்து காற்றில் சுழற்றுவான். ஒரு நாள் சச்சின் டெண்டுல்கர் ஆவதுதான் ஏழே வயதான அஹ்மாதின் கனவு.

வேலையாட்கள் வீடு போகும்முன் ஒவ்வொரு மாலையும், பாட்கள் வைக்கப்படும் சேகரிப்பு கிடங்கில் அவற்றை எண்ணிப் பார்ப்பது ரஹ்மான் சாச்சாவின் வழக்கம். ஒரு பாட் குறைந்தாலும் உடனே தனது துப்பறியும் வேலையைத் துவங்கி விடுவார் சாச்சா.

என்ன அதிசயம்! ஒருநாள் காலை, சாச்சா தயாரான பாட்களை எண்ணி லாரியில் ஏற்றுவதற்காக பாட்கள் வைக்குமிடத்தைத் திறந்தார். ஒரு பாட் குறைவது தெரிந்து விட்டது. அதிலும் அது மிகவும் பெரிய, வேறு இலேசான பாட்.

மிகுந்த கோபத்துடன் சாச்சா, எல்லா வேலையாட்களையும் வரிசையாக நிற்க உத்தரவிட்டார்."ஒரு பாட் குறைகிறது. அது எங்கே போயிருக்கும்?"

எல்லோரும் கீழே பார்த்துக்கொண்டு தலையை ஆட்டினார்கள். ஏனென்றால் கோபமாயிருக்கும் சாச்சாவைப் பார்ப்பதற்கு, அவர்களுக்கு பயம்!

"இரவோடு இரவாக எப்படி ஒரு பாட் காணாமல் போகும்? உங்களையும் என்னையும் தவிர வேறு எவரும் இங்கு நுழைவதில்லை," என்று உரக்க சத்தமிட்டார் சாச்சா. அப்பொழுதும், எல்லோரும் கீழேயே பார்த்துக்கொண்டிருந்தனர்.

சாச்சாவின் பார்வை ஆமீரின் மீது சென்றது. "ஆஹா! அஹ்மத் எங்கே, ஆமிர்? அவனை ஏன் இன்று காணவில்லை?" என்றார்.

"அவனுக்கு உடல் நலமில்லை, சாச்சா. இருமல், சளி." என்று கீழே பார்த்துக்கொண்டே சொன்னார் ஆமிர்.

திடீரென்று ஒவ்வொருவராக இலேசாக ஆரம்பித்து, பின்னர் பலமாக சிரிக்கத் துவங்கினர். ஆமிரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்.

"வெட்கமில்லாமல் ஏன் எல்லோரும் சிரிக்கிறீர்கள்?" என்று கேட்டார் சாச்சா, மேலும் கோபப்படமுடியாமல்.

மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆமிர் சொன்னார், "தொலைந்து போன பாட்டைக் கண்டு பிடித்ததுவிட்டோம்."

அதிசயித்தில் திளைத்த சாச்சா, "நீங்கள் எல்லோரும் என் முன்னே நின்று கொண்டேதான் இருக்கிறீர்கள், எப்படிக் கண்டுப்பிடித்தீர்கள்? எங்கே அது?" என்றார்.

எல்லோரும் அவரது கைத்தடியை நோக்கினார்கள்; சாச்சாவுந்தான்!

சாச்சா அவ்வளவு சத்தமாக வாய்விட்டு சிரிப்பார் என்று அதுவரை எவருக்கும் தெரியாது; மேலும் அவர் பொய்ப்பல் (பல்செட்) கட்டியிருந்தார் என்பதும் கூடத்தான்!