எப்போதும் நம்மைச் சுற்றி வாயு இருக்கிறது. அசையும் வாயுவை காற்று என்கிறோம். வீசும் காற்றில் ஆற்றல் இருக்கும்.
காற்றின் ஆற்றல்,
காற்றாடிகளை வானில் பறக்க வைக்கிறது.
வீசும் காற்றைத் தடுக்கும்
பொழுது அதன் ஆற்றல்
பெருகிப் பெருகி...
கடைசியில் வெடிப்பாக வெளியேறும்.
ஆனால், நாம் காற்றின் ஆற்றலைத் தடுத்து நமக்குப் பயன்படும் ஆற்றலாக மாற்றிக்கொள்ள முடியும்.
காற்றாலைகள், காற்று ஆற்றலைத் தடுத்து மின்சார ஆற்றலாக மாற்ற உதவுகின்றன.
வீசும் காற்றின் ஆற்றல், காற்றாலைகளின் இறக்கைகளை சுழலச் செய்கிறது.
சுழலும் இறக்கைகள் காற்று ஆற்றலை மின்சார ஆற்றலாக மாற்றுகின்றன.
இந்த மின்சாரத்தை காற்று வீசுவது நின்ற பிறகும் நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.