கடல் ஆமையின் கதை
S. Jayaraman
ஆள் அரவமற்ற கடற்கரைகளில், இருளின் போர்வையில், பகலெல்லாம் சூரியனின் ஒளியால் சூடுபடுத்தப்பட்ட ரிட்லி கடல் ஆமைகளின் முட்டைகள் பொரிந்து குஞ்சுகளாகின்றன. அவைகளில் ஒன்றுதான் நமக்குக் கதை சொல்லும் கடல் ஆமைக்குஞ்சு. கடற்கரையில் வழி தவறிவிடாமலும், உண்ணக் காத்திருக்கும் எதிரிகளின் கண்ணில் படாமலும் கடலுக்குள் சென்றதில் குஞ்சுக்குப் பெருமகிழ்ச்சி. ஆனால், நமது ஆலிவ் ரிட்லி கடல் ஆமைக்குஞ்சு, ஆபத்தான கடல் பயணத்தைப் பத்திரமாய் கடக்குமா? கொடூரமான சுறாக்களையும், பயங்கரமான மீன்பிடி வலைகளையும் தாண்டி தப்பித்து வந்து, அதனுடைய விடலைப்பருவம் வரை வாழ்ந்து, தனது என்று சொல்லிக்கொள்ள கொத்தாக முட்டைகளை கடற்கரையில் இடும் சந்தோஷம் அவளுக்கும் கிடைக்குமா? தெரிந்து கொள்ளப் படியுங்கள், ஆலிவ் ரிட்லி கடல் ஆமைக்குஞ்சு ஒன்றின் வாழ்க்கைப் பயணக்கதையை!