கல்லுவின் உலகம் 3 - தோட்டக்கார மங்குவும், அம்பியா பூதமும்
S. Jayaraman
வாருங்கள் கஜூரியாவுக்கு! இங்குதான் கல்லுவும் அவனது நண்பர்களும் தினமும் ஏதாவது துன்பம் தராத, துணிகரமான சேட்டைகளை செய்வார்கள். சிலசமயம் கிராமத்து பழக்க வழக்கங்களை கேள்வி கேட்பார்கள். அட்டூழியங்களை எதிர்ப்பார்கள். அல்லது அவரவர் வேலைகளை கவனிப்பார்கள். இதில் எதை வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் செய்வார்கள். கஜூரியாவில் எல்லோருக்கும் முனியாவின் கோபத்தைப் பற்றித் தெரியும்.அதே போல தோட்டக்கார மங்கு தன் தோட்டத்திலிருந்து மாம்பழங்களை யாருக்கும் கொடுக்காமல் கஞ்சத்தனமாக இருப்பதும் அனைவருக்கும் தெரியும். முனியாவுக்கோ மாம்பழம் வேண்டியிருந்தது. அதுவும் மங்குவின் பழத் தோட்டத்திலிருந்து! ஒரு சிக்கலான நிலைமைதான். அடுத்து என்ன நடந்தது என்று உங்களால் யூகிக்க முடியுமா? இந்தக் கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.