arrow_back

கல்லுவின் உலகம் 3 - தோட்டக்கார மங்குவும், அம்பியா பூதமும்

"அதோ அங்கே வருகிறாள்" கல்லு வீதி முனையைச் சுட்டிக்காட்டினான்.

"ஏன் இன்று இத்தனை தாமதம்? பள்ளியில் ஏதோ நடந்திருக்க வேண்டும்" கல்லுவின் தம்பி ஷப்பு கவலையுடன் சொன்னான்.

அவர்கள் இருவரும் பள்ளியிலிருந்து முன்னதாகவே வந்துவிட்டார்கள். ஆனால் சகோதரி முனியா இன்னும் வீட்டுக்கு வரவில்லை. எனவே மதிய உணவு தாமதமாகியது. முனியா தன்னுடைய புத்தகப்பையை இழுத்துக் கொண்டு மிக மெதுவாக நடந்து அருகில் வந்ததும், அவளது சிவந்த கன்னமும், கோபம் கொப்பளிக்கும் கண்களும் அவர்களுக்குத் தெரிந்தது.