arrow_back

கல்லுவின் உலகம் 4 - ஜாதகம் பார்க்கும் ஹீரோ

கல்லுவின் உலகம் 4 - ஜாதகம் பார்க்கும் ஹீரோ

S. Jayaraman


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

வாருங்கள் கஜூரியாவுக்கு! இங்குதான் கல்லுவும் அவனது நண்பர்களும் தினமும் ஏதாவது துன்பம் தராத, துணிகரமான சேட்டைகளை செய்வார்கள். சிலசமயம் கிராமத்து பழக்க வழக்கங்களை கேள்வி கேட்பார்கள். அட்டூழியங்களை எதிர்ப்பார்கள். அல்லது அவரவர் வேலைகளை கவனிப்பார்கள். இதில் எதை வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் செய்வார்கள். ஒரு உலகப் புகழ் பெற்ற ஜோதிடர்-கைரேகை நிபுணர் - தந்திரத்தில் வல்லுனர்-எதிர்காலம் சொல்லுபவர்- எண் கணித மேதை.. அந்த கிராமத்திற்கு வருகிறார்.எதிர்காலத்தைத் தவிர வேறு எதைப்பற்றி சொல்ல முடியும் அவரால்? வகுப்பு கணிதப் பரீட்சை கேள்விகள்? இல்லை சில மாயாஜாலங்கள்? இந்த ஜாதகப் புலியை கல்லுவும் அவனது கூட்டணியும் சோதித்து பார்க்க முடிவு செய்தால் என்ன நடக்கும்? தெரிந்து கொள்ள ஜோசியரைத் தேடிப் போகாதீர்கள். இந்தக் கதையைப் படியுங்கள்...