kamalavin

கமலாவின் பாடல்

கமலாவின் அம்மா, தினமும் அவளை அழைக்க, ஒரு இனிமையான பாடல் பாடுவார். ஒரு நாள், ஒரு வஞ்சக கொரில்லா, அவள் அம்மாவைப் போலவே பாடியது.

- Annapoorani Krishnan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

கமலா, காட்டிற்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்தாள்.

காட்டில் விளையாடுவது அவளுடைய

பொழுதுபோக்கு.

அம்மா அவளை எப்பொழுதும் ஜாக்கிரதையாக இருக்கச் சொன்னார்.

அவளை அழைக்க, அம்மா தினமும் , ஒரு குறிப்பிட்ட பாடலை பாடுவார்.

ஒரு நாள், கமலா ஒரு கொரில்லாவை

சந்தித்தாள்.

உடனே அவள் ஓடி,  ஒரு குகைக்குள் ஒளிந்து கொண்டாள்.

அம்மா பாடும் பாடலை, கொரில்லா, தன் முரட்டுக் குரலில் பாடியது.

தன் குரலை இனிமையாக்க, கொரில்லா, நிறைய வாழைப்பழங்களை சாப்பிட்டது.

கொரில்லா இனிமையாகப் பாடியது.

தன் குரலை மேலும் இனிமையாக்க, கொரில்லா, நிறைய தேன் அருந்தியது.

கமலாவின் அம்மாவைப் போலவே, கொரில்லா, மிகவும் இனிமையாக பாடியது.

தக்க சமையத்தில் வந்து, அம்மா, கொரில்லாவை விரட்டினார்.

கமலாவும் அம்மாவும் பாடிக்கொண்டே வீடு சென்றனர்.