என் பெயர் மியா.
நான் என் அம்மாவுடன் கடைத்தெருவுக்குப் போகிறேன்.
இந்த உலகத்திலேயே கண்ணாமூச்சி ஆட்டத்தில் நான்தான் மிகச் சிறந்தவள்! சந்தையில் உன்னால் என்னைக் கண்டுபிடிக்கவே முடியாது. ஆனால், அம்மாவின்பட்டியலில் உள்ள பொருட்களை, நீ கண்டுபிடிப்பதற்கு முன்னால் நான் கண்டுபிடித்து விடுவேன்.
கண்டுபிடி:
(1) பத்து சிவப்பு மிளகாய்கள்
(2) இரண்டு பச்சை தக்காளிகள்
(3) ஒரு உருளைக்கிழங்கு
(4) ஒரு பெரிய பூசணிக்காய்
அய்யோ!
என்னை எப்படிக் கண்டுபிடித்தாய்?
கண்டுபிடி:
(1) ஆறு மஞ்சள் வாழைப்பழங்கள்
(2) மூன்று ஆரஞ்சுப்பழங்கள்
(3) ஒரு ஆப்பிள் பழம்
(4) காம்புடன் இருக்கும் ஒரு
பப்பாளிப்பழம்
என்னையும், அம்மாவின் பட்டியலில் இருக்கும் பழங்களையும் கண்டுபிடித்துவிட்டாய்! இது இன்னொரு முறை நடக்காது.
கண்டுபிடி:
(1) ஐந்து ரோஜாப்பூக்கள்
(2) ஒரு ஊதா மாலை
(3) மல்லிகைப்பூக்கள்
(4) பூப்போட்ட அரைக்கால் சராய்
இது நியாயமே இல்லை!
ஒளிந்துகொள்வதில் நான்தான் இந்த உலகத்திலேயே மிகச் சிறந்தவள்.
கண்டுபிடி:
(1) ஒரு புள்ளி போட்ட லுங்கி
(2) பச்சைக் கோடுகள் போட்ட ஒரு புடவை
(3) கட்டம் போட்ட ஒரு பள்ளிச் சீருடை
(4) ஒரு கருப்புச் சட்டை
நான் எங்கே ஒளிந்திருக்கின்றேன் என்று அம்மா காட்டிக்
கொடுத்தாரா, என்ன? இப்பொழுது என்னை எப்படிக் கண்டுபிடிக்கிறாய் என்று பார்க்கலாம்!
கண்டுபிடி:
(1) மூன்று கிள்ளப் பார்க்கும் நண்டுகள்
(2) ஒரு கோபமான கணவாய் மீன்
(3) ஏழு இறால்கள்
(4) பனிக்கட்டியின் மேல் வைத்த மீன்கள் இரண்டு
இதுவரை அதிர்ஷ்டம் உன் பக்கம் இருந்தது.
ஆனால் என் வீட்டில் உன்னால் என்னைக் கண்டுபிடிக்கவே முடியாதே!
கண்டுபிடி:
(1) ஒரு மண்பானை
(2) ஒரு மரக்கரண்டி
(3) ஒரு தீப்பெட்டி
(4) ஒரு தண்ணீர் பாட்டில்
மறுபடியும் என்னைக் கண்டுபிடித்து விட்டாய்!
சரி, இனி என்னால் விளையாட முடியாது.
நான் மதிய உணவு சாப்பிட வேண்டும்.
அம்மா மட்டும் என்னை விளையாட்டை நிறுத்தச் சொல்லாமல் இருந்திருந்தால்,
நான்தான் வெற்றி பெற்றிருப்பேன்.
கண்ணாமூச்சி ஆட்டத்தில் நான்தான் இந்த உலகத்திலேயே மிகச் சிறந்தவள்!
விடைகள்:
(1) பத்து சிவப்பு மிளகாய்கள் (2) இரண்டு பச்சைத் தக்காளிகள்
(3) ஒரு உருளைக்கிழங்கு (4) ஒரு பெரிய பூசணிக்காய்
விடைகள் :
(1)ஆறு மஞ்சள் வாழைப்பழங்கள் (2) மூன்று ஆரஞ்சுப்பழங்கள் (3) ஒரு ஆப்பிள் பழம் (4) காம்புடன் இருக்கும் ஒரு பப்பாளிப்பழம்
விடைகள்:
(1) ஐந்து ரோஜாப்பூக்கள் (2) ஒரு ஊதா மாலை (3) மல்லிகைப்பூக்கள்
(4) பூப்போட்ட அரைக்கால் சராய்
விடைகள்:
(1) ஒரு புள்ளி போட்ட லுங்கி (2) பச்சைக் கோடுகள் போட்ட ஒரு புடவை(3) கட்டம் போட்ட ஒரு பள்ளிச் சீருடை (4) ஒரு கருப்புச் சட்டை
விடைகள்: (1) மூன்று கிள்ளப் பார்க்கும் நண்டுகள் (2) ஒரு கோபமான கனவாமீன்
(3) ஏழு இறால்கள் (4) பனிக்கட்டியின் மேல் வைத்த மீன்கள் இரண்டு
விடைகள்:
(1) ஒரு மண்பானை (2) ஒரு மரக்கரண்டி (3) ஒரு தீப்பெட்டி
(4) ஒரு தண்ணீர் பாட்டில்