ஜீத்து அவன் நண்பர்களுடன் விளையாடுகிறான்.
இந்த முறை ஜீத்து நூறு வரை எண்ண வேண்டும்.
ஜீத்து எண்ண ஆரம்பித்து விட்டான்.
விஜு மரத்தின் பின் ஒளிந்துக்கொள்கிறான்.
ராஜு கார் அருகே ஒளிந்துக்கொள்கிறான்.
சுமன் ஒரு கதவுக்குப் பின் ஒளிந்துக்கொள்கிறாள்.
அமன் ஒரு கூடைக்கு அடியில் ஒளிந்துக்கொள்கிறான்.
பிஜு ஒரு அண்டாவின் உள்ளே ஒளிந்துக்கொள்கிறான்.
அடடா! ஜீத்து எண்ணுவதை நிறுத்தி விட்டான். 39க்கு அடுத்து வரும் எண் எது?
மீண்டும் ஒருமுறை அவன் 1-2-3 எண்ண ஆரம்பிக்கிறான்.
அவன் நண்பர்கள் மறுபடி ஒளிந்தே ஆக வேண்டும்.