கண்ணுக்குத் தெரியாத மேலங்கி
Irulneeki Ganesan
உங்களிடம் யார் கண்ணுக்கும் தெரியாமல் செய்யும், 'மாய ஆடை மேலங்கி' ஒன்று இருந்தால் என்ன செய்வீர்கள்? அப்போது கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுவது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஆனால், உண்மையிலேயே அத்தகைய மாய ஆடை மேலங்கியை யாராவது தயாரிக்கிறார்களா? அல்லது அவை அறிவியல் புனைகதைகளிலும், கற்பனைக் கதைகளிலும் மட்டுமே உள்ளனவா? அதைக் கண்டுபிடிக்க ஆர்னவ், தனிஷா நூலகத்துக்குப் போகிறார்கள். அவர்களை நாமும் சத்தமின்றிப் பின்தொடர்வோம்! அவர்களால் நம்மைப் பார்க்க முடியாது. ஏனெனில், அவர்களுடைய உலகத்தில் நாம், அவர்களின் கண்ணுக்குத் தெரியாதவர்கள்!