kili

கிளி

இக்கதைஇல் சிறுமி தண் ஓவியத்துின்மூலம் சுகண்திரத்தை தத்ரூபமாக வெளிப்படுத்துவதை காணுங்கால்.

- Kilimozhi Palani

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

நீல நிற கிளி ஒன்று இருந்தது. அது ஒரு வீட்டின் ஜன்னலின் மேலே அமர்ந்து உள்ளே எட்டிப் பார்த்தது.

அப்போது ஒரு பெண் தூங்கி எழுந்து மெத்தையின் மீது அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தாள்.

அவள் மேசையின் மீது ஒரு பேனாவை பார்க்கிறாள் . அதை எடுத்து நாம் படம் வரையலாம் என்று யோசிக்கிறாள்.

"இந்த பேனாவை வைத்து நாம் என்ன படம் வரையலாம்" என்று சிந்தித்தவாறு இருந்தாள்‌

அப்போது ஜன்னலின் மீது அமர்ந்துள்ள கிளியே பார்க்கிறாள். ஜன்னலின் பக்கத்தில் சென்று கிளியிடம் பேசுகிறாள். அப்போது அவளுக்கு ஒரு யோசனை! நாம் ஏன் இந்த நீலநிற கிளியை வரையக் கூடாது என்று சிந்திக்கிறாள்.

அந்தப் பெண் நீல நிறத்தில் இருந்த கிளியை வரைய ஆரம்பித்தாள்.

கிளியின் உருவத்தை வரைந்து கொண்டிருந்த போது பேனாவின் ஊக்கு உடைந்து விட்டது. கிளியின் உருவத்தை இனி எப்படி வரைவது என்று வருத்தப்பட்டாள்.

அவளிடம் புதிய பேனா ஒன்று இருந்தது திடீரென ஞாபகத்திற்கு வந்தது.  அலமாரியிலிருந்து புதிய பேனாவை எடுத்து மீண்டும் படம் வரைய ஆரம்பித்தாள்.

அவள், ஒரு பெண் அந்தக் கிளியை பறக்க விடுவது போல் ஓவியம் வரைந்து இருந்தாள்.

அந்த நீலநிற கிளி அந்த சிறுமிக்கு நன்றி சொல்லி, சந்தோஷமாக பறந்து சென்றது.