காட்டில் இளமான் ஒன்று போட்டிக்கு சென்றது.
அது முயலை முந்தி சென்றது.
அது யானையை முந்தி சென்றது.
அது பாய்ந்து ஓடையை தாண்டியது.
அது உடைந்த சுவர்களையும் கடந்து சென்றது.
புல்தரை சமவெளியில் பெரிய பாறை இருந்தது. அதில் இடித்து தடுமாறி கீழே விழுந்தது.
அது மிகவும் அழுதது.
குரங்கு அதன் காலை உருவியது. இளமானின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
கரடி அண்ணன் இளமானை தூக்கிவிட்டது. அப்பொழுதும் அது அழுகையை நிறுத்தவில்லை.
அதன் அம்மா வந்தது. "பார், நாம் இந்த மோசமான பாறையை! அடிக்கலாம்" என்றது.
"ஓ, அப்படி செய்ய வேண்டாம், பிறகு அதுவும் அழும்" என்றது இளமான். அதைக் கேட்ட அம்மா சிரித்தது. இளமானும் சிரித்துக் கொண்டே சென்றது.