kootar koovin iniya ninaivugal

கூட்டர் கூவின் இனிய நினைவுகள்

இந்த அழகிய ஆல்பத்தைத் திறந்து கூட்டர் கூ, அவன் நண்பர்கள், குடும்பத்தினரைச் சந்திக்கலாம் வாருங்கள். இந்தப் புறா தன் (முட்டை) ஓட்டிலிருந்து வெளியேறி அற்புதமான புதிய உலகைச் சுற்றி தன் கூட்டத்தினரைக் கண்டுபிடித்து, கூடவே அன்பையும் மகிழ்ச்சியையும் கண்டுபிடிக்கிறது. அடையாளங்களையும், புறாக்களையும் கொண்டாடும் ஒரு வேடிக்கைப் புத்தகம் இது.

- Vetri | வெற்றி

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

இந்த சான்றிதழ் கூட்டர் கூ என்ற குழந்தை கூகிலாபென்னுக்கும் கூட்டர் கொமரனுக்கும் கொலம்பியா லிவியா மருத்துவமனையில் 13 அக்டோபர்1981இல் பிறந்ததை உறுதிசெய்கிறது.

பிறந்த நேரம் மதியம் ஒன்று.

பதிவு என்ள் 162150

முகவரி: பி 8 6055, 12ஆவது மாடி, கிழக்கு பார்த்த ஏசி, புறாக்கூடு அப்பார்ட்மெண்ட், குட்டர் பிரதேசம்

திரு. ரூஃபஸ் டிபி பறவைப் பிறப்புகளுக்கான பதிவாளர்

சாட்சி 1

சாட்சி 2

கொலம்பியா லிவியா மருத்துவமனை பறந்து தொடங்க வாங்க

பெயர்.... கூட்டர் கூ

எடை..... 0.23 கிலோ

இறக்கை நீட்டம்.... 9 செமீ

முதல் உணவு.... ஒரு துளி புறா  பால் கழிவு...  இயல்பாக, கட்டியாக, வெண் பழுப்பு நிறத்தில் பிற குறிப்புகள்... கூட்டர் நல்ல பசியோடிருக்கிறது

(குழந்தைகள் மருத்துவர்) மரு. புக்புக்வாலா எம்பிபிஎஸ், எம்டி (பறவையார் கல்லூரி) அடுத்த முறை இந்த அட்டையைக் கொண்டு வரவும்

பிறப்புக் குறிப்புகள்

சொந்தங்களுடன் கலாட்டா

நாள் 6

நாள் 15

நாள் 30

மசக்களி ஃபோட்டோ ஸ்டூடியோ, பால்கனி பைப் சாலை,கூட்டர் பிரதேசம ‘‘நாங்கள் நினைவுகளையே படம்பிடிப்போம்”

எங்கள் குடும்ப மரம்

கூட்டர் கூ தாத்தா

(மேஜர் ஜெனரல் கூட்டர் கூ தியோல் பக்‌ஷி)

கூமி பக்‌ஷி பாட்டி

கூகிலாபென்கூமர் அம்மா

கூட்டர் கூமர் அப்பா

கப்பி அத்தை

காகு மாமா

டாலி மாமி

கூட்டர் கூ

ரோமி

பின்க்கி

டோவி

லோவி

கூட்டரின் முதல் குடும்பப் பயணம்

உங்களை கூட்டர் கூவின் பிறந்தநாள் பார்ட்டிக்கு வரவேற்கிறோம்

நாள் 13 அக்டோபர் 1982

நேரம் காலை 11 மணி

முகவரி பி 8 6055, 12ஆவது மாடி

கிழக்கு நோக்கிய ஏசி

புறா கோட்டை அபார்ட்மெண்ட்

கூட்டரின் முதல் பிறந்தநாள்

எத்தனை பரிசுகள்!

அன்புள்ள கூட்டருக்கு,

பாட்டியும் நானும் உன்னோட முதல் பிறந்தநாளுக்கு வரமுடியாததுக்கு மன்னிச்சுக்கோ. பாட்டிக்கு நல்ல ஜுரம், நிறைய தும்முறாங்க. உனக்கும் உன் நண்பர்களுக்கு ஜுரத்த ஒட்டிவிட்டுட வேண்டாம்னுதான் வரல.ஆனா உனக்கு பரிசு அனுப்ப மறக்கல! சீக்கிரமே பரிசு வந்து சேர்ந்துடும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

எங்க ரெண்டு பேருக்கும் உன்ன நினைச்சு ரொம்ப பெருமை. எப்போவும் உன்னைப் பத்திதான் பேசிகிட்டு இருப்போம். உன்ன எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்.அன்புடன்,

தாத்தாவும் பாட்டியும்.

பள்ளியில் முதல்நாள்

பின்வரிசை: பிட்டூ, வின்க்கி, மசக்களி, சிம்ரன், அழகன், நஃபீசா, ஹபிபுல்லா, சேர் அமி, குஸ்தாவ் நடுவரிசை: குட்டர் கூ, பாடி, கமாண்டோ, ஜாலி, மசக்களி, ராஜா, கோவிந்தா, கரீஷ்மா  முன் வரிசை: இளவரசன், ராணி, மிஸ்டர் கே பூட்டர், சிஸ்டர் ராக், மிஸ்டர் பயாரா, பெஸ்டோ, பாபி, குயிட்

புறாவால்                  அக்காடமி

1982ஆம் ஆண்டின் வகுப்பு

புறாவால் அக்காடமியில் ஒன்றாம் வகுப்பில் படிக்கும் கூட்டர் கூ பள்ளி நாடகமான ‘பறவைகள்’இல் (ஹிட்ச்காக் படத்தை அடிப்படையாகக் கொண்டது) 2 நவம்பர் 1982இல் பங்கேற்றதற்கான சான்றிதழ்.

புறாவால்                     அக்காடமி

மதிப்பெண் அட்டை மாணவர் பெயர், வகுப்பு:

கூட்டர் கூ ஒன்று

நீண்ட தூர பறத்தல்         80

கூவுதல்                                90

நாடகம்                                  98

கணிப்பொறி                      70

ஆசிரியர் குறிப்புகள்: கூட்டர் கூ வேகமாக கற்றுக்கொள்கிறான். வகுப்பில் பிற மாணவர்களிடம் கனிவாக நடந்துகொள்கிறான்

கையெழுத்து

தலைமையாசிரியர் கையெழுத்து

கூட்டரின் முதல் குடும்பச் சுற்றுலா

புறாவால் நாடக சொசைட்டி

வழங்கும் இசை நாடகம்

புறாவால் அரங்கம். 19 ஏப்ரல் 1983, இரவு 9 மணி.

தினசரிச்                         செய்ய்ய்திகள்

புறாவால் அக்காடமி மாணவர் சிறந்த நடிகர் விருதை வென்றார்

மதிப்பெண் அட்டைமாணவர் பெயர்: கூட்டர் கூ

பாடம்                      மதிப்பெண் கூவுதல் திறன்                      82

கணிப்பொறி மேல்நிலை  68 நீண்ட தூரம் பறத்தல்          90 நாடகம்                                     99

சிறகு ஒப்பனை                    98

இரை தேடுதல்                      79

பிற குறிப்புகள்

வகுப்பாசிரியர் குறிப்புகள்

கூட்டர் வகுப்பு நேரங்களில் அடிக்கடி ஜன்னல் வழியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பான் என்றாலும் எப்போதும் நேரத்தில் வகுப்பு மற்றும் வீட்டு வேலைகளை முடித்துவிடுவான். சிலநேரங்களில் “வானத்தின் எல்லை எது?” என்பது போன்ற ஆழமான கேள்விகளைக் கேட்பான். மிகவும் படைப்பூக்கமும், கனிவான மனமும் கொண்டவன். உலகத்தைப் பற்றி ஆர்வமுடையவன்.

பள்ளி கடைசி நாள்

எங்கள் அருமை மகன் கூட்டர்!

புறாவால்                அக்காடமி

அரசமரத் தெரு குட்டர் பிரதேசம்

புறாவால் அக்காடமியின் தலைமையாசிரியரும் பிற ஆசிரியர்களும் கூட்டர் கூவுக்கு இந்த மெரிட் சான்றிதழை வழங்குவதில் மகிழ்கிறோம். அவர் தன் பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்து வெளியேறுகிறார்.

தலைமையாசிரியர் மூத்த கல்லார்

பயணி பெயர்: கூட்டர் கூ

வயது: 2.5 செல்லுபடி காலம்: 1 ஜூன் 1983 - 31 ஜூலை 1983

இனிய பயணமாகுக, கூட்டர் கூ!

அம்மாவும் அப்பாவும்!

கடவுச்சீட்டு

கூட்டர் பிரதேச சனநாயக

ரிபப்ளிக்

என் சைபீரிய நண்பர்களுடன். இடம்-வலம்: ஓல்கா, புடின், காஸ்பரோவ், நாதியா, இவான், ஹெலனா, ஷ்லோமோ.

சாக்கடலில் கடற்கரையை இரசித்தபடி

சுதந்திர தேவிக்கு ஹலோ சொல்லுங்க!

நியூ யார்க்! நியூ யார்க்!

ரியோ! யோ! யோ! யோ!

இந்த பிரமிட் எவ்வளவு உயரம்.

உலகத்தின் உச்சியில்!

காப்படோசியாவின் புறா பள்ளத்தாக்கில்

சாய்ந்த கோபுரம் மொத்தமா சாஞ்சுடும் போலயே!

சீனப் பெருஞ்சுவர்

துருக்கிய வானில்

அருங்காட்சியகங்களுக்குப் போய் எனக்குப் பிடித்த ஓவியங்களை நேரில் பார்க்கிறது. பாரிஸ், ஐ லவ் யூ!

உலகம் ரொம்ப அழகு அம்மா, அப்பா! நீங்களும் வந்திருந்தால் நன்றாக இருக்கும்.கூட்டர்

திருமதி கூகிலாபென்

பி8 6044, 12ஆவது மாடி,

கிழக்கு பார்த்த ஏசி,

புறாக்கூடு அப்பார்ட்மெண்ட்,

குட்டர் பிரதேசம்

1     2      2       2        2    5   6

சாகசம் விரும்பும் புறாக்களுக்கான பயண வழிகள்

பல லட்சம் வருடங்களுக்கு முன் ஒரு சிறிய நாடு அளவிலான பெரிய பறவை ஒன்று குட்டர் பிரதேசத்திலிருந்து பறந்துசென்று இந்தியப் பெருங்கடலின் நடுவில் பெரிய கக்கா போனதாம். அப்படித்தான் இந்த மாயாஜால கக்கா தீவு உருவானது. 500 வருடங்களுக்கு முன் அடக்கிவைத்த வாயுக்கள் வெளியேறி நடந்த ஒரு எரிமலை வெடிப்பில் இந்த தீவு காணாமல் போய்விட்டது. கக்கா தீவின் சரியான இடத்தைக் கண்டுபிடிக்க பல வீரதீர பறவைப் பயணிகள் சமீபகாலமாக முயன்று வருகிறார்கள்.

அன்புள்ள அம்மா அப்பா,நானும் நெருப்புக்கோழி கண்டத்தில் எனக்குக் கிடைத்த புது நண்பரும். என் நண்பன் கொஞ்சம் கூச்ச சுபாவம். சீக்கிரம் உங்களை வந்து பார்க்கிறேன்.கூட்டர்

கக்கா தீவு சாகசக் கூட்டமைப்புகூட்டர் கூ

கக்கா தீவைக் கண்டுபிடிப்பதற்கான 677838494480498ஆவது

பயணத்தில்

1 ஜூலை 1983இல் பங்கேற்றதற்கான சான்றிதழ்.

அதிகாரபூர்வ கையெழுத்து

கூட்டர் திரும்ப வந்துட்டான்

உன்ன ரொம்பவே மிஸ் பண்ணோம்.

பாவோ மயில்சாமி நாடகப் பள்ளி

வானமே எல்லை, கூட்டர் கூ!

இது கல்லூரிக் காலம்

பொருள்: பாவோ மயில்சாமி நாடகப் பள்ளியில் சேர்தல்பாவோ மயில்சாமி நாடகப்பள்ளி சார்பாக 1983 வசந்தகால வகுப்புகளில் சேர்வதற்கான உங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். (குட்டர் பிரதேசம் மாதிரியில்லாமல், ஈமு நாட்டில் இப்போது வசந்தகாலமாகும். டிசம்பரில் பயங்கர வெயிலடிக்கும்.) உங்கள் விண்ணப்பத்தோடு அனுப்பியிருந்த டேப்பில் உங்கள் கூவும் திறனும், பிற பறவைகள் போல் நடித்துக்காட்டும் திறனும் கண்டு வியந்தோம்.உங்களைப் போல ஒரு திறன்வாய்ந்த மாணவர் கிடைத்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி.

அனுப்புநர்முதல்வர்,பாவோ மயில்சாமி நாடகப்பள்ளி,கூக்கூபூர் காடுஈமு நாடு.

ஜூலை 31, 1983

முதல்வர்கொக்கரக்கோ கொக்

அடையாள அட்டைபெயர்: கூட்டர் கூதுறை: நாடகம்செமஸ்டர்: 1

நிர்வாகிபாவோ மயில்சாமி நாடகப் பள்ளி

பறவைகள் தந்தி                                         மற்றும்  தபால் துறை

கூட்டர் கூபாவோ மயில்சாமி நாடகப் பள்ளிகூக்கூபூர் காடுஈமு நாடு1/09/1983 அன்று பள்ளிக்கு வந்துசேர்ந்தேன். மிஸ் யூ.

2 செப்டம்பர் 1983

கூட்டரும் வகுப்புத் தோழர்களும்

நவீன நடன வகுப்பு

நடிப்பு வகுப்பு

குரல் பயிற்சி வகுப்பு

பாவோ மயில்சாமி நாடகப் பள்ளி, திரைப்பட சங்கம் வழங்கும்*

‘பறவைக்கத்தி’ படத்தின் இயக்குனருடன் ஒரு மாலைபா குருவிஜித்பா குருவிஜித் அவர்கள் கூட்டர் கூவுடன் உரையாடுவார்

வடக்குப் பக்கம்கரண்ட் கம்பிமதியம் 2.302 நவம்பர் 1983

இயக்குநர் பா குருவிஜித்துடன் மாஸ்டர் கிளாஸ்

ஒப்பனை கற்கும் கூட்டர்

பாலே நடனப் பயிற்சி

கூட்டரின் ஹாஸ்டல்

கல்லூரியில் கடைசிநாள் பார்ட்டி

கூட்டரின் பட்டமளிப்பு விழா

பி ஹாஸ்டல்

அன்புள்ள அம்மா அப்பா,

நான் கல்லூரியில் வாங்கிய மெடல், என் ஸ்பெஷல் நண்பன் சலீமின் படங்களை அனுப்புகிறேன். நாங்கள் இருவருமாக உங்களை சீக்கிரம் வந்து பார்க்கிறோம். ஐ லவ் யூ!

உங்கள், கூட்டர்.

கூட்டர் பிரதேசத்தில் கூட்டரும் சலீமும்

கூட்டர் நடித்த முதல் திரைப்படம்

மைனா ராகம்

கூட்டரின் திரைப்பட போஸ்டர்

திரைப்பட விமர்சகர் கொக்குராஜ் ரங்கனிடம் இருந்து தங்க முட்டை விருது பெறும் கூட்டர்

தங்க முட்டை வென்றார் கூட்டர் கூ

பறவைகள் பலவிதம்

எப்போதும் நேசிக்கப்படும் முட்டைகளுக்கான இல்லம்

அன்புள்ள கூட்டர், சலீம்,

நீங்கள் இருவரும் ‘ பறவைகள் பலவிதம்

எப்போதும் நேசிக்கப்படும் முட்டைகளுக்கான இல்லம்’ வந்து பார்க்க நேரம் ஒதுக்கியிருக்கிறோம். இங்கே உங்கள் வீட்டுக்கு ஒரு புது உறுப்பினரைக் கண்டுபிடிப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் 11 ஜனவரி 1984 காலை 10.30க்கு வரலாம். தாமதம் செய்யாதீர்கள்.

அன்புடன்,

ஃபுட்கி.

கூட்டரும் சலீமும் முதல்முறை மைனா ராகம் படம் பார்த்தபோது

பறவைகள் பலவிதம் எப்போதும் நேசிக்கப்படும் முட்டைகளுக்கான இல்லம்

வீட்டில் மைனா

எங்கள் பேரப்பிள்ளையைப் பார்க்க காத்திருக்கிறோம்

அன்புள்ள மைனா,எங்க வீட்டின் புதிய கடைக்குட்டியைப் பார்க்க நாங்கள் ரொம்ப ஆவலாக இருக்கிறோம். உனக்கு நிறைய அன்பும் முத்தங்களும்.ரோமி, பின்க்கி, லோவி, டோவி.

அன்பு அன்புதான்