குக்கூவிற்கு நட்சத்திரங்கள் என்றாள் மிகவும் பிடிக்கும். அவள் அன்று இரவு நட்சத்திரங்களை நினைத்துக் கொண்டே உறங்கச் சென்றாள்.
அவள் திடீரென கண் விழித்து பார்த்தாள், பார்த்ததும் அவள் வியப்பில் ஆழ்ந்தாள். ஏனென்றால் அவள் நட்சத்திரங்களின் மத்தியில் நின்றிருந்தாள்.
நட்சத்திரங்கள் அவளுடன் உரையாடவும் செய்தன. அவைகளுடன் அவள் விளையாடவும் செய்தாள்.
இறுதியில், நட்சத்திரங்கள் கூக்கூவிற்க்கு, நிறைய பரிசுகள் தந்தன. அவள் மிகவும் சந்தோசமாக இருந்தாள். திடீரென சத்தம் கேட்டு அவள் கண் திறந்தாள் அனைத்தும் கனவாய் இருந்தது. இருந்தும் அவள் தன் கனவில் நட்சத்திரங்களுடன் பேசியதை நினைத்து மிக்க மகிழ்ச்சியுடன் அன்றைய நாளை தொடங்கினாள்.