ஒரு ஊர்லே ஒரு மாமா இருந்தார்.
யார் இருந்தார்?
ஒரு மாமா இருந்தார்.
அந்த மாமா தொப்பி வித்தார்.
மாமா என்ன வித்தார்?
தொப்பி வித்தார்.
ஒரு நாள் ரொம்ப தூரம் நடந்தார்?
என்ன பண்ணார்?
ரொம்ப தூரம் நடந்தார்.
அதனால், அவருக்கு தூக்கம் வந்தது?
என்ன வந்தது?
தூக்கம் வந்தது.
அதனால் ஒரு மரத்துக்கு கீழே உக்கார்ந்தார்
எங்கே உக்கார்ந்தார்?
மரம் கீழே.
அப்புறம் தூங்கிட்டார்.
என்ன பண்ணார்?
தூங்கிட்டார்.
அப்ப என்ன ஆகி இருக்கும்?
அந்த மரம் மேலே குரங்குகள் இருந்தன.
என்ன இருந்தன?
குரங்கு(கள்).
அந்த குரங்கு என்ன செய்திருக்கும்?
அந்த குரங்குகள் கீழே வந்திச்சிங்க.
எங்கே வந்திச்சிங்க?
கீழே வந்திச்சிங்க.
யாரு கீழே வந்தது
குரங்கு(கள்).
அப்புறம்?
குரங்குகள் தொப்பி பையை திறந்து பாத்திச்சிங்க.
அய்ய் .. யா! தொப்பிங்க. நிறைய நிறம். சூப்பர்!
குரங்குகள் தொப்பியை தலையிலே போட்டுக்கிச்சிங்க.
குரங்குகள் என்ன செய்தாங்க?
தொப்பியை போட்டுக்கிச்சி.
குரங்குகள் எங்கே தொப்பியை போட்டுகிச்சிங்க?
தலையிலே.
குரங்குகளுக்கு ரொம்ப சந்தோசம்.
அதனால் அதுங்க டான்ஸ் பண்ணிச்சிங்க.
குரங்குகள் என்ன பண்ணிச்சிங்க?
டான்ஸ் பண்ணிச்சிங்க.
குரங்குகள் ஏன்
டான்ஸ் பண்ணிச்சிங்க?
ரொம்ப சந்தோசம்.
தொப்பி மாமா எழுந்திட்டார். அப்ப குரங்குகள் மரத்துலெ ஏறிடிச்சிங்க.
குரங்குகள் ஏன் மரத்துல ஏறினாங்க?
தொப்பி மாமா எழுந்திட்டார்.
குரங்குகள் அந்த மாமாவை பாத்திச்சிங்க.
அந்த மாமா பையைப் பார்த்தார்.
பையிலே என்ன இருந்தது?
ஒண்ணும் இல்லை. காலி.
ஒ ஹோ!
தொப்பி எல்லாம் எங்கே?
அந்த மாமா மேலே மரத்துல பார்த்தார். அங்கே என்ன பார்த்தார்?
குரங்குகள் தொப்பி போட்டுக்கிட்டு இருந்தாங்க.
ம்ம்ம்ம்ம்ம்......
எப்படி நம்ம தொப்பியைத் திருப்பி வாங்கறது!
மாமா யோசிச்சார்.
அப்புறம் அவர் தொப்பியை குரங்கு மேலே போட்டார்.
மாமா என்ன பண்ணார்?
குரங்கு மேலே தொப்பியைப் போட்டார்.
அப்புறம் என்ன ஆச்சி?
குரங்குக்கு கோவம் வந்திச்சி.
என்ன வந்திச்சி?
கோவம் வந்திச்சி.
அப்புறம் குரங்குகள் தொப்பியை கழட்டி அந்த மாமா மேலே போட்டிச்சிங்க.
அந்த மாமா தொப்பியை எல்லாம் எடுத்திக்கிட்டார்.
ஹேப்பி!
கதை நல்லா இருக்கா?
இங்கே யார் ஸ்மார்ட்? மாமா வா குரங்கா?