ஒரு ஊரில் ஒரு மாமா இருந்தார்.
யார் இருந்தார்?
ஒரு மாமா இருந்தார்.
அந்த மாமா தொப்பி விற்பவர்.
அந்த மாமா என்ன விற்பார்?
தொப்பி விற்பார்.
மாமா ஒரு நாள் நீண்ட தூரம் நடந்தார்.
மாமா என்ன செய்தார்?
நீண்ட தூரம் நடந்தார்.
அதனால் அவருக்குத் தூக்கம் வந்தது.
என்ன வந்தது?
தூக்கம் வந்தது.
அதனால், அவர் ஒரு மரத்துக்குக் கீழே உட்கார்ந்தார்.
அந்த மாமா எங்கே உட்கார்ந்தார்?
ஒரு மரத்துக்குக் கீழே உட்கார்ந்தார்.
பிறகு தூங்கிவிட்டார்
அந்த மாமா என்ன செய்தார்.
தூங்கிவிட்டார்.
பிறகு என்ன நடந்திருக்கும்?
அந்த மரத்தின் மேலே சில குரங்குகள் இருந்தன.
மரத்தின் மேலே என்ன இருந்தன?
குரங்குகள் இருந்தன.
அந்த குரங்குகள் என்ன செய்திருக்கும்?
குரங்குகள் கீழே வந்தன.
குரங்குகள் எங்கே வந்தன?
கீழே வந்தன.
யாரு கீழே வந்தது?
குரங்குகள்.
அப்புறம் என்ன நடந்திருக்கும்?
குரங்குகள் தொப்பி பையைத் திறந்து பார்த்தன.
அய்ய்ய்....யா! தொப்பி. நிறைய நிறம்! சூப்பர்!
குரங்குகள் தொப்பியைத் தலையில் போட்டுக்கொண்டன.
குரங்குகள் என்ன செய்தன?
தொப்பியைத் தலையில் போட்டுக்கொண்டன.
குரங்குகள் தொப்பியை எங்கே போட்டுக்கொண்டன?
தலையில்.
குரங்குகளுக்கு ரொம்ப மகிழ்ச்சி.
அதனால், குரங்குகள் விளையாடின.
குரங்குகள் என்ன செய்தன?
விளையாடின.
குரங்குகள் ஏன் விளையாடின?
மகிழ்ச்சி.
தொப்பி மாமா எழுந்துவிட்டார். குரங்குகள் மரத்தில் ஏறிவிட்டன.
குரங்குகள் ஏன் மரத்தில் ஏறின?
தொப்பி மாமா எழுந்துவிட்டார்.
குரங்குகள் அந்த மாமாவைப் பார்த்தன.
மாமா பையைப் பார்த்தார்.
பையில் என்ன இருந்தது?
ஒன்றும் இல்லை. காலி.
ஒ ஹோ!
தொப்பி எங்கே?
மாமா மரத்தின் மேல்பார்த்தார். அங்கே என்ன பார்த்தார்?
குரங்குகள் தொப்பி போட்டுக்கொண்டிருந்தன.
ம்ம்ம்ம்ம்......
தொப்பியை எப்படி திரும்ப வாங்குவது?
மாமா யோசித்தார்.
அவர்து தொப்பியைக் குரங்குகள் மேல் போட்டார்.
மாமா என்ன செய்தார்?
குரங்குகள் மேல் தொப்பியைப் போட்டார்.
அப்புறம் என்ன நடந்தது?
குரங்குகளுக்குக் கோவம் வந்தது.
என்ன வந்தது?
கோவம் வந்தது.
குரங்குகள் தொப்பியை மாமா மேல் போட்டன.
மாமா தொப்பியை எடுத்துக்கொண்டார்.
மகிழ்ச்சி!
கதை எப்படி இருக்கிறது?
இங்கே யார் புத்திசாலி? மாமாவா குரங்குகளா?