லயா டீச்சர் ‘பெரிய மரம் பள்ளி’ யின் விளையாட்டு ஆசிரியர்.
பள்ளி முடிந்த பின், யார் உதவி கேட்டாலும் அவருக்கு
உதவி செய்வதை விரும்புவார்.
”கிளம்பு!” என்று உரக்க ஆணையிட்டார், லயா டீச்சர்.
மோட்டாடர் பைக் என்னவோ கிளம்பவே இல்லை!
அருகிலிருந்த மோனா மூன்று முறைமேலும் கீழும் குதித்தாள்.
தம், தம், தம்!
ரோனக் கைகளை ஆறு முறை தட்டினான்.
பட்-பட், பட்-பட், பட்-பட்!
அமீனா எண்களை பின்னோக்கிசொல்லத் தொடங்கினாள்.
‘‘ ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு, ஐந்து, நான்கு,
மூன்று, இரண்டு, ஒன்று - கிளம்பு!’’
டுர்ர்ர்ர்ர்......
அந்த அற்புத மோட்டார் பைக் உரத்த சத்தத்துடன் கிளம்பியது!
ஒரு நாள் மஞ்சப்பா என்ற விவசாயி
லயா டீச்சரைக் கூப்பிட்டார்.
“லயா டீச்சர்! தயவு செய்து எனக்கு உதவுங்கள்!என் டுக்கி குரைப்பதை நிறுத்திவிட்டது!”
ரீனா குதிக்கத் தொடங்கினாள் — தம், தம், தம்!
அனில் கை தட்ட ஆரம்பித்தான் — பட்-பட், பட்-பட், பட்-பட்!
சுட்கி பின்னோக்கி சொல்லத் தொடங்கினாள் —
‘‘ ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு - ஓஹோ! ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு, ஐந்து, நான்கு,
மூன்று, இரண்டு, ஒன்று - கிளம்பு!’’
டுர்ர்ர்ர்ர்......
லயா டீச்சரும், அவரது அற்புத பைக்கும் மஞ்சப்பாவின் தோட்டத்தை வந்தடைந்தனர்.மஞ்சப்பா அவரை வரவேற்க ஓடி வந்தார். அவர் பின்னால் டுக்கி ஓடி வந்தாள்.அவளது நீண்ட வால் வேகமாக ஆடியது. லப்-லப், லப்-லப், லப்-லப்!
லயா தன் ஹெல்மெட்டைக் கழற்றினார். லயா டீச்சரையும்,
அவரது அற்புத பைக்கையும் பார்த்து மிகவும் மகிழ்ந்த டுக்கி...
...குரைக்க ஆரம்பித்து விட்டாள்.
”லொள்-லொள், லொள்-லொள், லொள்–லொள்!”
”மிக்க நன்றி லயா டீச்சர்!” என்றார் மஞ்சப்பா.
பப்பி குதிக்க ஆரம்பித்தது — தப், தப், தப்!
அனில் கை தட்ட ஆரம்பித்தான் — பட்-பட், பட்-பட், பட்-பட்!
சுட்கி எண்ண ஆரம்பித்தாள் — ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு, ஐந்து, நான்கு,
மூன்று, இரண்டு, ஒன்று - கிளம்பு!
எல்லோருக்கும் உதவும் லயா டீச்சர், தனது பெரிய மரம் பள்ளிக்குத் திரும்பினார்.
டுர்ர்ர்ர்.....
லயா டீச்சரும் அவரது அற்புத பைக்கும் அடுத்தது எங்கே செல்வார்கள்?