“தபாஆல்ல்ல்!”யாரிடமிருந்து வந்திருக்கும் என்று லெனினுக்கு ஆச்சரியமாக இருந்தது.
“ஆகா, ராஜன் மாமா அனுப்பியிருக்கிறார்!”
என்னுடைய நண்பர்கள் இருவர் ஏப்ரல் 12 அன்று மதுரை வழியாகச் செல்கிறார்கள். அவர்கள் சிறிதுநேரம் ஓய்வெடுக்க மதுரையில் ஒரு இடம் தேவை. மதியம் மூன்று மணியளவில் அவர்கள் உன்னுடைய வீட்டுக்கு வந்துவிடுவார்கள். அவர்களை நன்றாகக் கவனித்துக்கொள்வாய் என்று நம்புகிறேன்.
அன்புடன், மாமா
அன்புள்ள லெனினுக்கு,
இன்றுதான் ஏப்ரல் 12. வெயில் கொளுத்துவதால் கசகசவென்று இருக்கிறது.
“ஊஊஊ! இன்னும் சர்க்கரை போடணும்!”
கிர்ர்ர்ரிங்! அழைப்பு மணி சத்தமாக ஒலிக்கிறது.
சர்ர்ர்ர்ர்ர்!
“ஓ! வணக்கம்! வாங்க, உள்ள வாங்க!” என்றான் லெனின்.
“கொஞ்சம் எலுமிச்சை ஜூஸ் குடிங்க.”
“அய்யோ! மன்னிச்சுடுங்க. இதோ வர்றேன்!” என்றான் லெனின்.
கிளிங்! தாம்! டொய்ங்!
“ஓ, இப்போ ஜூஸை எதில் ஊத்திக் கொடுப்பேன்? ஆ இதுல! அப்புறம் இதுல!”
“இதக் குடிங்க! தாகமா இருப்பீங்க.”
“அய்யோ!”
“மன்னிச்சுடுங்க. இதோ வர்றேன்!”
“இப்போ குடிங்க, ப்ளீஸ்!”
“அய்யோ! மன்னிச்சுடுங்க.... இதோ வர்றேன்!”
களுக்! களுக்!
களுக்! களுக்!
லெனினின் பழச்சாறு விருந்தில் இந்த உயிரினங்களெல்லாம் கலந்துகொண்டால், அவர்களுக்கு ஜூஸை எதில் ஊற்றிக் கொடுப்பான்?
பதில்களை அறிய அடுத்த பக்கத்தைப் பார்க்கவும்.
ஒட்டகச்சிவிங்கி
தேன்சிட்டு
பூனை
தூக்கான் பறவை
1
2
3
4