லூவி ஒருநாள் நகரத்திற்கு வந்தது.
அங்கே ஓர் அலங்கார நிலையம் திறந்திருந்தது.
“நம்மைக் கொஞ்சம் அலங்காரம் செய்துகொள்வோம்..!” லூவி நினைத்தது.
லூவி தன் அலங்காரத்தை ஆரம்பித்தது.
நகங்களை வெட்டிக் கொண்டது.
சிகை அலங்காரத்தையும் சிறப்பாக செய்துகொண்டது.
லூவியின் அலங்காரம் அற்புதமாக இருந்தது.
“இப்போது நண்பர்களிடம் போவோம்..!”
ஆனால் நண்பர்களின் வரவேற்பு...
லூவியை எலியாரும் கேலி செய்தார்...
“அச்சோ... நகம் இருந்திருந்தால்...”
லூவிக்கு தான் செய்த தவறு புரிந்தது.
லூவி
சிலகாலத்துக்கு மறைந்து வாழ முடிவு செய்தது.