maaten maaten

மாட்டேன் மாட்டேன்... பள்ளிக்கு போகவே மாட்டேன்!

இந்த சுட்டி பள்ளிக்கு போவானா மாட்டானா?

- Monica Rasna J

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

முழிச்சுக்கோ முழிச்சுக்கோ... விடிஞ்சிருச்சு முழிச்சுக்கோ...

மாட்டேன் மாட்டேன் முழிக்கவே மாட்டேன்... பெரிய வேலைய பண்ண மாட்டேன்...

பல் துலக்க மாட்டேன்!

குளிக்க மாட்டேன்!

இட்லி கூட சாப்பிட மாட்டேன்!

பள்ளிக்கு போக மாட்டேன்!

அப்படியா... ஆனா இன்னிக்கி தான் பள்ளியில இருந்து மிருகக்காட்சிசாலை போறோமே!

சரி சரி அப்போ நான் இட்லியும் சக்கரையும் சாப்பிடுறேன்!

பள்ளிக்கு கண்டிப்பா போறேன்!

பாட்டு பாடிக்கிட்டே குளிக்க போறேன்!

புத்தம் புது பற்குச்சி வச்சு பல் துலக்க போறேன்!

அடடா அவசரம் வந்துருசே!

பெரிய வேலைக்கு நேரம் வந்துருச்சு, நகருங்க எல்லாரும்!

இதோ வேகமா வந்துட்டேன் வந்துட்டேன்... வழி விடுங்க!