madhu s mantra do not do not

மதுவின் புராணம்“ வேண்டாம் வேண்டாம்”

குட்டி மதுக்கு எது கொடுத்தாலும் சரி, எதற்கெடுத்தாலும் சரி, வரும் ஒரே பதில் “வேண்டாம் வேண்டாம்” என்பதுதான்! திடீர் என்று ஒருநாள்,மதுவின் “வேண்டாம் வேண்டாம்” புராணம் அடியோடு நின்றுவிட்டது! காரணம் என்ன? கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்!

- Revathi Siva

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

மது என்று அழைக்கப்படும் மதுமதிக்கு எட்டு  வயதாகுகிறது.

குட்டி மதுக்கு எது கொடுத்தாலும் சரி எதற்கெடுத்தாலும் சரி, வரும் ஒரே பதில் “வேண்டாம் வேண்டாம்” என்பதுதான்!

அம்மா சாப்பிடக் கூப்பிட்டாலும் “வேண்டாம் வேண்டாம்” தான், அப்பா பழங்கள் கொடுத்தாலும் “வேண்டாம் வேண்டாம்” தான்!

இந்த காய்கறியா “வேண்டாம் வேண்டாம்”, இந்த டிபின் எனக்கு “வேண்டாம் வேண்டாம்”, இந்த ட்ரெஸ் நல்லா இல்ல எனக்கு “வேண்டாம்வேண்டாம்”.

அங்க போகனுமா “வேண்டாம் வேண்டாம்”, அந்த பொம்மை “வேண்டாம் வேண்டாம்”....

இப்படி குட்டி மது “வேண்டாம்வேண்டாம்” என்று புராணம் பாடியே அனைவரையும் ஒருவழி செய்துவிடுவாள்.

இவளின் இந்த செயலால் அவளின் அம்மா அப்பா மிகுந்த கவலைப்பட்டனர்.

திடீர் என்று ஒரு நாள்,

மதுவின்  “வேண்டாம் வேண்டாம்” புராணம் அடியோடு நின்றுவிட்டது!

அவளின்அம்மா, குட்டி மதுவின் மாற்றத்தைக் கவனித்து காரணம் கேட்டார்.அதற்கு பதில்சொன்ன மதுவின் வார்த்தையில்,அனைவரும் அதிர்ச்சியாயினர்.

“அன்னைக்கு சனிக்கிழமை நாம வெளிய போகும் பொழுது, ஒரு குட்டிபாப்பா காசு கேட்டப்ப, நான் தரும்போது “வேண்டாம் வேண்டாம்” னு சொல்லி என்னை கூட்டிட்டு வந்தீங்கத்தானே! அந்தப் பாப்பா காசு இல்லாம வாங்கி சாப்பிட முடியாம அன்னிக்கு அழுதுகிட்டே போச்சுதானே,  அந்த “வேண்டாம் வேண்டாம்” நீங்க சொன்ன போது எனக்கு ரொம்ப கோவம் வந்துச்சு! இதேமாதிரிதான உங்களுக்கும் இருக்கும்! இனிமே இந்த மது எல்லாத்துக்கும் “வேண்டாம்வேண்டாம்” சொல்லாது. "

"அம்மா, ஆனாஅன்னிக்கு நீ ஏன் காசு தரல? பாப்பா பாவம் இல்லியா? “

மதுவின் அம்மா, மதுக்குட்டியைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு, அவளுக்கு முத்தமிட்டப்படியே சொல்ல ஆரம்பித்தார்.

“மதுமா, அம்மா எப்பையும் உங்களை கவனமா யார் கூட்டாலும் போககூடாது, தெரியாதவங்க எது கொடுத்தாலும் வாங்கக்கூடாதுனு ஏன் சொல்றேன் தெரியுமா?

குட்டிபசங்களைத் திருடி இதுமாதிரி பிச்சைகேட்க சில பேர் வைக்கராஙக! நாம அவங்களுக்கு இதுமாதிரி உதவி செய்யும் போது, இன்னும் நிறையய குட்டிபசங்கள அந்த திருடர்கள் தூக்கிட்டுபோராங்க! அதுக்குத்தான்அம்மா, “வேண்டாம் வேண்டாம்” சொன்னேன்.”

“அப்ப அம்மா, அவங்களுக்கு நாம ஹெல்ப் பண்ண முடியாதா?“ என்று மது கேட்க,

“பண்ணலாம் குட்டிமா ! ஆனால், அது அவங்களுக்கு ஆபத்தா முடியாதமாதிரிப் பார்த்துக்கனும்”என்றார்.

“பிக் கேர்ள் ஆனபிறகு என்னால முடிஞ்ச ஹெல்ப்ப நானும் செய்வேன்மா” என்று கூறி மடியில் இருந்த மதுகுட்டி,அம்மாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு கொஞ்ச ஆரம்பித்தாள்.

இவ்வாறு மதுகுட்டியின் “வேண்டாம் வேண்டாம்” புராணம், அடியோடு“வேண்டாம் வேண்டாம்” என்றாகிவிட்டது.