காகமும் குருவியும் நல்ல நண்பர்களாக இருந்தன.. ஒரு நாள் காகம் உப்பால் வீடு கட்டியது, குருவியோ மெழுகு கொண்டு வீடு கட்டியது,,
ஒரு நாள் நல்ல மழை பெய்தது. அப்பொழுது காகம் கட்டிய உப்பு வீடு கரைந்து விட்டது, குருவியின் வீடு கரையவில்லை,,
அப்பொழுது காகம் யோசனை செய்தது, "நாம் இப்பொழுது எங்கே செல்வது "?என்று, சரி நாம் குருவின் வீட்டிற்கு செல்லலாம் என்று நினைத்தது,,
காகம் குருவி இடம் "மழையால் என் வீடு கரைந்து போனது, அதனால் உன் வீட்டில் எனக்கு இடம் தருவாயா "என்று கேட்டது,
குருவி காகத்திடம் "என் மகன் உள்ளே தூங்கிக் கொண்டிருக்கின்றான், இப்பொழுது நீ உள்ளே வர முடியாது" என்று குருவி கூறியது,,
அதைக்கேட்ட காகம் வருத்தத்துடன் வானத்தில் பறந்து சென்றது.