malaimel vaazhum maaya poonai

மலைமேல் வாழும் மாயப் பூனை

இப்புத்தகம் உங்களை மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளின் உள்ளே வெகுதூரம் அழைத்துச்செல்கிறது. ஒரு காட்டுயிர்ப் புகைப்படக்காரர், ஒரு விநோதப் பூனையைத் தேடிப் புறப்படுகிறார். வழியில் அவர் பல மனங் கவர் உயிரினங்களைப் பார்க்கிறார். ஒரு சிலிர்ப்பூட்டும் உண்மை அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கதைக்கு மேலும் சுவாரசியம் சேர்க்கும் நகைச்சுவையான சித்திரங்கள். அவருடைய தேடலில் பங்கேற்க, உங்களைத் தூண்டுவதற்கு வேறென்ன வேண்டும்?

- K. R. Lenin

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

இது செந்தில் மாமாவின் கதை.

அவருக்கு மிகவும் பிடித்தது அவருடைய கேமரா.

எப்போதும் அவர் கேமராவும் கையுமாகத்தான் இருப்பார்.

செந்தில் மாமா சிறு வயதில் பொம்மைகளுக்கு ஆசைப்படவில்லை.

எப்போதும் அபூர்வமான விலங்குகளைப் பற்றிய புத்தகங்களைப் படித்தபடியே இருப்பார்.

வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும்போதுகூடத் தான் படித்த மிருகங்களைப்பற்றிதான் கனவு கண்டுகொண்டிருப்பார்.

நாட்கள் கடந்தன. செந்தில் மாமாவின் தோழர்களெல்லாம் மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், நடன அமைப்பாளர்களாகவும் ஆனார்கள்.

செந்தில் மாமா அலுவலகங்களில் வேலை செய ஆசைப்படவில்லை. அவர் பாம்புகள், முதலைகள், ஆமைகள் எனப் பல உயிரினங்களைப் படம் பிடிப்பதையே தன் முழு நேரப் பணியாக ஆக்கிக்கொண்டார். குடும்பம், நண்பர்கள் எல்லோரையும் விட்டுவிட்டு சுதந்திரமாகக் காட்டுக்குள் போக முடிவு செதார்.

மேற்குத்தொடர்ச்சி மலைக்கு அவர் சென்றிருந்த முதல் பயணத்தின் போது ஒரு காட்டுப்பூனையைக் கண்டார். அவர் தன் கேமராவை எடுக்கும் முன்னால் கண நேரத்தில் அந்தக் காட்டுப்பூனை இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டது.

அன்று முதல் அந்த அபூர்வக் காட்டுப்பூனையின் படத்தைப்பிடித்து உலகுக்குக் காட்ட வேண்டும் என்கிற ஆசை அவரைப் பிடித்துக்கொண்டது. அதற்காகவே அவர் மீண்டும் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளுக்குச்செல்ல முடிவு செதார்.

அந்த மலைகளில் வாழும் மற்ற உயிரினங்களிடம் பேசி அந்த சாம்பல் நிறம் கொண்ட காட்டுப்பூனை எங்கே வாழ்கிறது என்பதைக் கேட்டறியலாம் என நினைத்தார்.

மலைகளின் அடிவாரத்திலிருந்து அவர் தன் பயணத்தைத் தொடங்கினார்.

சூரியனின் வெப்பத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள ஒரு தொப்பியை அணிந்து கொண்டார். அத்தொப்பியும் சாம்பல் நிறத்திலேயே இருந்தது.

கோடைக் காலத்தில் தாகத்தைத் தணித்துக்கொள்ள எல்லா உயிரினங்களும் நீர் நிலைகளைத் தேடி வரும். ஆதலால்

நீர் நிலைகள்தான் அவற்றைச் சந்திக்க சரியான இடம் என்று முடிவு செதார்.

ஒரு தண்ணீர்க் குட்டையில் பூனை இனத்தின் தலைவனான மாண்புமிகு புலியார் அவர்களைப்பார்த்தார். செந்தில் மாமா புலிக்குத் தன் பணிவான வணக்கத்தைத் தெரிவித்த பின்,

"ஓ! வலிமை மிக்க புலியார் அவர்களே! மனிதர்கள் கண்ணில் படாமல், சட்டென்று மறையக்கூடிய, எனது தொப்பியைப் போல சாம்பல் நிறமுடைய, உயரமான ஒரு காட்டுப் பூனையைத் தாங்கள் கண்டதுண்டோ?"

என்று கேட்டார். புலி ஒன்றும் சோல்லாமல், உருமிவிட்டு ‘போடா’ என்பது போல முகத்தைத் திருப்பிக் கொண்டது.

கடவுளே! புலி தன் மீது பாயாமல் விட்டதே என்ற நினைப்புடன் மெல்ல அந்த இடத்திலிருந்து நழுவினார் செந்தில் மாமா.

இடி மின்னலுடன் மழை பெயத் தொடங்கியது. செந்தில் மாமா மழையில் முழுவதுமாக நனைந்து விட்டார். மழை விட்டதும் ஈசல்கள் மொக்கத் தொடங்கின. எங்கிருந்தோ வந்த எறும்புகள் ஈசல்களைப் பிடித்துச் சாப்பிட்டன.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெயும் மழை அருவியாக விழுந்து, ஆறாகப் பெருகி ஓடி வருகிறது. இப்படி வரும் தண்ணீர்தான் நாம் உயிர் வாழவும், வயல்களில் பயிர்கள் வளரவும் பயன்படுகிறது.

எனவே, நமக்கு வாழ்வாதாரமான குடிநீர் தடையில்லாமல் கிடைக்க நாம் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளைக் காப்பாற்றவேண்டும்.

அடுத்து செந்தில் மாமா, ஒரு யானைக் குடும்பம் குளத்தில் நீராடிக்கொண்டிருப்பதைப் பார்த்தார். மழையை யானைகள் உற்சாகமாக அனுபவித்துக்கொண்டிருந்தன.

சில தரையில் வளர்ந்திருந்த புல்லை துதிக்கையில் எடுத்துச் சாப்பிட்டன. சில யானைகள் மரக்கிளைகளை ஒடித்துச் சாப்பிட்டன.

"மன்னிக்க வேண்டும், யானை நண்பர்களே!" என்று தொப்பியை எடுத்து வணக்கம் சோன்ன பிறகு கேட்டார், "நீங்கள் பெரிய சாம்பல் நிறக் காட்டுப் பூனையைக் கண்டதுண்டோ? தயவு செது சோல்லுங்களேன்."

"இல்லை, இல்லை, இந்தப்பக்கத்தில் அந்தக் காட்டுப் பூனையை நாங்கள் பார்த்ததே இல்லை," என்று எல்லா யானைகளும் ஒரே குரலில் கூறின.

செந்தில் மாமா மேலே ஏறி மழைக் காட்டுப் பிரதேசத்திற்குள் நுழைந்தார். "இதுதான் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் இரண்டாம் கட்டம்" என்று முணுமுணுத்தார். நா குறைப்பது போன்ற சத்தம் அடர்ந்த காட்டுக்குள்ளிருந்து பதிலாக வந்தது,

"ஓ! அது கேளையாடுதான், அது தன் எதிரிகளைக் கண்டால் கொடுக்கும் அபாய எச்சரிக்கைக் குரல் நா குறைப்பது போலிருக்கும்," என்று தனக்குத்தானே சோல்லிக்கொண்டு மேலே நடந்தார்.

மரத்தின் மேலே பலாப்பழச் சுளைகளை,

சிங்கத்தின் பிடரி மயிரைப் போன்று வெள்ளை முடிகளைக் கொண்ட குரங்கு ஒன்று சாப்பிட்டுக் கொண்டிருந்தது.

அதன் பெயர் சோலை மந்தி அல்லது சிங்கவால் குரங்கு என்பதை அவர் அறிவார். அதனிடம், "ஐயா,சோலை மந்தியாரே! நான் சாம்பல் நிறக் காட்டுப்பூனையைப் பார்க்க வேண்டும். உதவி செவீர்களா?" என்று கேட்டார். சரி, சோல்கிறேன், கேள்.

இந்த வழியாக நேராக நடந்து போ. ஒரு மரத்தில் மிகப்பெரிய தேன்கூடு இருக்கும்.

அந்த மரத்தின் அருகே பூமிக்கடியில், சூரிய வெளிச்சம் படாமல் மறைந்து வாழும் ஒரு அபூர்வமான தவளை இருக்கிறது.

அதற்கு இந்தக் காட்டைப்பற்றி எல்லா விஷயங்களும் நன்றாகத்தெரியும். அதைப்பார்த்துக் கேள், என்று சோலை மந்தி வழி காட்டியது.

செந்தில் மாமா அந்த அபூர்வத் தவளையைக் கண்டுபிடிக்கும் ஆவலில் சோலை மந்திக்கு நன்றிகூடச் சோல்ல மறந்து அவசரமாகக் கிளம்பிவிட்டார்.

சோலை மந்தி காட்டிய திசையில் மரங்களினூடே நேராக விறுவிறுவென்று நடந்தார்.

கடைசியாக மிக உயரமான ஒரு மரத்தில் எப்போது கீழே விழுந்து விடுமோ என்கிற நிலையில் ஒரு பெரிய தேன்கூடு தொங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார்.

"ரிப்பிட், ரிப்பிட்" என்று குரல் கொடுத்தது தவளை. ஆனால், பனிப்படலம் மூடியிருந்ததால் செந்தில் மாமாவால் தவளையை சரியாகப் பார்க்கமுடியவில்லை.

"ஓ! காட்டுப்பூனையைத் தேடித் திரியும்

மனிதனா நீ? உன்னைப்பற்றி ஒரு வௌவால்

என்னிடம் முன்பே கூறியிருக்கிறது."

"ஐயா, தவளையாரே! தயவுசெது அந்தக் காட்டுப்பூனை எங்கே வாழ்கிறது என்பதைச் சோல்வீர்களா? நான் உங்களுக்குக் கைமாறாக அழகிய பூ ஒன்றைத் தருகிறேன்," என்றார் செந்தில் மாமா.

அந்தத் தவளை செவ்வூதா நிறத்தில் இருந்தது. நசிகபட்ராகஸ் எனும் இனத்தைச் சேர்ந்த, இந்தியாவில் மட்டுமே காணப்படும் தவளை வகை இது.

இதை "கொட்டான்" என்று காட்டுவாசிகள்  அழைப்பார்கள். அந்தத் தவளை, "நீங்கள் தேடும் காட்டுப்பூனை வாழும் இடம் ஒரு காட்டுவாசிக்குத் தெரியும். அவரைச் சந்தித்துக் கேட்டால் அவர் வழி காட்டுவார்" என்று கூறியது.

அந்த அபூர்வமான தவளையைப் பார்த்த ஆச்சரியத்தில்

பேசக்கூட முடியாமல் தலையை அசைத்தார் செந்தில் மாமா.

அடர்ந்த அக்காட்டின் உள்ளே செல்லச் செல்ல மரங்களின் அடர்த்தி வெகுவாகக் குறையத் தொடங்கியது. "மனிதர்கள் மரங்களை வெட்டித் தள்ளுகிறார்கள். பாவம் காட்டுயிர்கள், அவை தூங்க இடமில்லாமல் துன்பப்படவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றன.நமக்கு நமது வீடுகள் எப்படியோ அப்படித்தானே காட்டுயிர்களுக்கு இந்தக் காடு" என்று செந்தில் மாமா வருத்தப்பட்டார்.

மனிதர்களின் பேராசையால் காடுகள் வேகமாக அழிக்கப்பட்டு வருவது அவருக்கு வருத்தத்தையும் வேதனையையும் உண்டாக்கியது.

செந்தில் மாமா மௌனமாக ஒரு பிரார்த்தனை செதார்,

செந்தில் மாமா மௌனமாக ஒரு பிரார்த்தனை செதார்,

"கடவுளே! இந்தக் காடுகளைக் காப்பாற்று. காட்டுயிர்கள் துன்பப்படாமல் வாழ உதவி செ."

அவர் மேலும் நடந்து சென்று மலை உச்சியிலிருந்த

சோலைவனப் புல்வெளிப் பிரதேசத்தை அடைந்தார்.

அதுதான் மறைந்து வாழும் சாம்பல் நிறக் காட்டுப்பூனையின் உறைவிடம். மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் ஒதுக்குப்புறமாக அமைந்திருந்த பசுமையான அந்தப் புல்வெளிப் பிரதேசத்தில் செந்தில் மாமா உட்கார்ந்து, சுற்றிலும் பார்த்தார்.

இயற்கை எழில் கொஞ்சும் அந்த நிலப்பரப்புதான் கதைகளில் வரும் வன தேவதைகளின் உறைவிடமாக இருக்க முடியும் என நினைத்துக்கொண்டார்.

சிந்தனையில் ஆழ்ந்திருந்த செந்தில் மாமாவின் முதுகில் யாரோ தட்டினார்கள்.

திரும்பிப் பார்த்து, "ஐயா, யார் நீங்கள்?" என செந்தில் மாமா கேட்டார்.

"என் பேரு கிருஷ்ணன். இந்தக் காடுதான் என் வீடு. இங்கே எனக்குத் தெரியாத எடமே கெடையாது. நீங்க எதத் தேடி வந்தீங்க?"

"ஐயா, உங்களைத் தேடித்தான் வந்தேன். சாம்பல் வண்ண அபூர்வக் காட்டுப்பூனையை எங்கே பார்க்க முடியும்? நான் ஒரே ஒரு முறைதான் அதைப் பார்த்திருக்கிறேன்."

"ஓ! நீங்க பொகையன் புலியைப் பத்திக் கேக்கிறீங்களா?" செந்தில் மாமாவிற்குக் காட்டுவாசி என்ன சோல்கிறார் என்று புரியவில்லை.

"யார் கண்ணிலும் படாம ஒளிஞ்சு வாழுதே அந்தக் காட்டுப்பூனையப் பத்திதானே கேக்கிறீங்க?"

"ஆமாம்! அதுவேதான் நான் தேடிக்கொண்டிருக்கும் அபூர்வப் பிராணி," என்றார் செந்தில் மாமா.

அவருக்கு மகிழ்ச்சி பொங்கியது. பாட்டுப் பாடிக் குதித்துக் கொண்டாட வேண்டும்போல் தோன்றியது.

அந்த மலையின் மேல்பகுதியைக் காட்டி, "அதோ அங்க நான் மூணே மூணு தடவ ரொம்பக்கிட்டக்க பாத்திருக்கேன்," என்றார் அந்தக் காட்டுவாசி.

செந்தில் மாமா இந்தக் காட்டுவாசியைத் தான் பார்த்ததும், அவரிடமிருந்து அந்தக் காட்டுப்பூனை வாழுமிடத்தைத் தெரிந்துகொண்டதும் தனது பாக்கியம் என்று மிகுந்த குதூகலத்துடன் ஒரு குட்டிக்கரணம் போட்டு விட்டுப் புறப்பட்டார். கிருஷ்ணனுக்கு அவரின் செகை புரியவேயில்லை. செந்தில் மாமா பாட்டுப் பாடிக்கொண்டே மேலே ஏறத்தொடங்கினார்.

போகும் வழியில் இரண்டு ஆண் வரையாடுகள் குதித்துத் தலையோடு தலை மோதிக்கொண்டிருந்தன. அந்த வரையாடுகள் மலைச்சரிவில் நடக்கவும் ஓடவும் ஏற்றவாறு எவ்வளவு நன்றாக உடல் வாகினையும் கால்களையும் பெற்றுள்ளன.

அவைகளைப்போலவே தானும் இந்த மலைப்பிரதேசத்தில் பிறந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று செந்தில் மாமா யோசித்தார்.

காட்டுவாசி காட்டிய இடத்தில் தான் கொண்டு வந்திருந்த சில தானியங்கிக் கேமராக்களைப் பல கோணங்களில் பொருத்தினார்.

இந்தக் கேமராக்கள் அவற்றின் முன்பாக எது வந்தாலும் அதைப் படம் பிடித்து விடும்.

இரவு வந்ததும் அந்த சோலைவனப் புல்வெளியில் மின்னும் நட்சத்திரங்கள் நிறைந்த அழகிய வானத்தைப் பார்த்துக்கொண்டே தூங்கிப்போனார் செந்தில் மாமா.

பொழுது விடிந்ததும் கேமராக்களை எடுத்துப் பார்த்தார்.

ஆஹா! அடடா! என்ன ஆச்சரியம்! எல்லாவற்றிலும் சாம்பல் நிறக் காட்டுப்பூனையின் படங்கள் பல கோணங்களில் பதிவாகியிருந்தன. இதுதான்

மலைமேல் மறைந்து வாழும்

மாயப் பூனை!

பத்து ஆண்டுகளுக்கு முன் தான் பார்த்த அந்த மாயப்பூனையைப் போலவே இருந்தது.

செந்தில் மாமாவுக்கு மிகவும் மகிழ்ச்சி. "தை,தை" என்று குதித்துக் கொண்டாடினார்.

அப்போதுதான் ஒரு சிறிய பாம்பு அவர் காலில் ஏறிப் போக அவர் திடுக்கிட்டு எழுந்து பார்த்தார்.

தான் தூக்கத்தில் கனவு கண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டார். தான் கண்ட கனவு மெப்படவேண்டும் என்று வேண்டிக்கொண்டார். குழந்தைகளே! நாமும்,

செந்தில் மாமா அந்த மாயக் காட்டுப்பூனையைப் பார்த்துப் படம் பிடித்துவிடுவார் என்று நம்பிக்கையோடு காத்திருப்போமா?

மேற்குத்தொடர்ச்சி மலைகளில் மறைந்து வாழ்வதாக எண்ணப்படும் ஒரு வகை மாயப்பூனையைக் கண்டுபிடிக்க செந்தில் மாமா மேற்கொண்ட தேடலைப் பற்றியதே இந்த வேடிக்கையான கற்பனைக் கதை.

இக்கதை சந்தேஷ் கடூர் என்பவரின் உண்மை அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. சந்தேஷ் கடூர், நேஷனல் ஜியோக்ராபிக் நிறுவனத்தைச் சார்ந்த வளரும் ஆராச்சியாளர் (அ ‡ச்ணாடிணிணச்டூ எஞுணிஞ்ணூச்ணீடடிஞி உட்ஞுணூஞ்டிணஞ் உதுணீடூணிணூஞுணூ),