இன்று, மலர் ஒரு பெரிய வீட்டைக் கட்டப் போகிறாள்!
“நான் இவற்றை வைத்து வீடு கட்டலாமே!”
“என்னுடைய பெரிய வீடு இவ்வளவு உயரமாக இருக்கும். இவ்வளவு அகலமாகவும் இருக்கும்!” என்றாள் மலர்.
தண்ணீர் குடிக்கும் குவளைகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கினாள் மலர்.
எல்லாக் குவளைகளும் சரிந்து விழுந்தன. டங்! ணங்! டடாங்!
குவளைகளை எடுத்து மீண்டும் முயன்றாள் மலர்.
டங்! டடாங்! ணங்!
மறுபடியும், எல்லாக் குவளைகளும் சரிந்து விழுந்தன.
இம்முறை குவளைகள் சரிந்து விழவில்லை. மலரின் வீடு மேலே, மேலே, இன்னும் மேலே உயர்ந்தது!
மலர் நன்றாக யோசித்தாள். பின் இன்னொரு முறை முயன்றாள்.
மலரின் பெரிய பளபளப்பான வீடு கிட்டத்தட்ட தயாராகி விட்டது.
மலர் சமையலறைக்கு ஓடினாள். எல்லோரும் வேலையில் மும்முரமாக இருந்தனர். “என்ன வேண்டும் மலர்?” என்று கேட்டார் அப்பா. “ஒரு தேங்காய்மூடி கிடைக்குமா, அப்பா? என் வீட்டுக்கு கூரை தேவைப்படுகிறது” என்றாள் மலர் . “ஆமாம், ஆமாம்! தேவைதான்” என்றார் அப்பா.
“என் பெரிய வீடு உங்களுக்கு பிடித்திருக்கிறதா, அப்பா?”
“ரொம்ப பிடித்திருக்கிறது. எவ்வளவு அழகான அரண்மனை இது!”
டங் டங்-டபடப-டடூம்!மலர் அடுத்து என்ன கட்டப் போகிறாள்?
உங்கள் அரண்மனையை கட்டலாம் வாருங்கள்
தேவையான பொருட்கள்:
- உங்களால் சேகரிக்க முடியுமளவு நிறைய காகிதக் குவளைகள் - சமையல் அறையிலிருந்து ஒரு வட்டமான பாத்திரம் - கலர் பென்சில்கள் அல்லது க்ரேயான்கள்- அரைமூடித் தேங்காய்
டொண்ட-டொய்ன்! உங்கள் அரண்மனை தயார்!