ஊரிலுள்ள எல்லா ட்ராகன்களும் வருடாந்திர தீ- ஊதும் போட்டிக்கு தீவிரமாய் தயாராகிக் கொண்டிருந்தன, ட்ரேக்கைத் தவிர!
ட்ரேக் சுட்டெரிக்கும் கோடை வெயிலில் அமர்ந்து உல்லாசமாய் கனிந்த மாம்பழங்களை ருசித்துக் கொண்டு இருந்தது. அவனைப் பார்த்தால், ஒருவேளை அவனுக்கு போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற வேண்டுமென்ற ஆசையில்லையோ என்னவோ என்று நீங்கள் நினைக்கலாம்....
இறுதியாக ட்ரேக் போட்டிக்கு போகலாமென்று முடிவெடுத்தான்.
போகும் வழியில் அவன் தன் வாயிலிருந்து பளிச்சென்ற மஞ்சள் வண்ண தங்கம் போல தகதகனு மின்னும் நெருப்பை ஊதுவதற்கு பயிற்சி எடுத்துக் கொண்டே சென்றான்.
ஆனால்....பாவம்!! அவன் ஊதிய பொழுதெல்லாம் சாம்பல் நிற புகை மட்டும் தான் வந்தது.
"ஐயோ! இது ஒரு நல்ல ட்ராகனுக்கு அழகல்லவே" - இப்படித்தான் அம்மா ட்ராகன் கூறியிருப்பார்.
பாவம் ட்ரேக் அழுக ஆரம்பித்து விட்டான்!
அவனால் இனிமேல் தகதகவென்ற தங்க நிற நெருப்பு ஊதி தன் தாயை பெருமைப் பட வைக்க முடியுமா??
உடனே அவனுக்கு ஒரு யோசனை!!
......
கிளம்பிப் போய் மிளகாய் அசுரனை சந்தித்தான் ட்ரேக் - அவன் தான் ட்ரேக்கின் கோச் (பயிற்சியாளர்)
அவர் ட்ரேக்கை நன்கு சிவந்த சிவப்பு மிளகாய்கள் உண்ணும் டயட்டில் அவனை ஈடுபடுத்தினார்
என்னே ஆச்சர்யம், சிவப்பு மிளகாய்கள் தங்கள் வேலையைக் காட்ட ஆரம்பித்தன!
ட்ரேக் பயிற்சி எடுத்தான்...எடுத்தான்.... நன்றாக பயிற்சி எடுத்துவிட்டான்...
இப்பொழுது...
அவனால் மஞ்சள் நிற தகதகக்கும் தங்க நெருப்பை ஊதமுடிகிறது!!
புதிதாய் தனக்கு கிடைத்த இந்த சக்தியை .....தங்க நிற தீ ஜுவாலைகளை வைத்து ட்ரேக்கால் கடலில் உள்ள கப்பல்களுக்கு வழி காட்ட முடிந்தது!
எனவே, அந்த நாள் முதல், கடலில் எந்த கப்பல்களும் வழி தவறி காணாமல் போகவில்லை!
இதனால் தாய் ட்ராகன் மிகவும் பெருமையடைந்தது! அது தானெ வேண்டும் நம் ட்ரேக்கிற்கு!!