ஞாயிறன்று மனுவுடைய பெற்றோர்கள் அவனுக்கு ஒரு சிவப்பு மழை கோட் வாங்கிக் கொடுத்தார்கள்.
"அம்மா, இப்பொழுதே போட்டுக் கொள்ளவா?" என்று மனு கேட்டான்.
" இல்லை, என் செல்லம் , மழை வர கொஞ்சம் நேரமாகும், இப்பொழுது வானம் தெளிவாக இருக்கிறது" என்றாள் அம்மா.
திங்களன்று பிரகாசமாகவும், வெயிலாகவும் இருந்தது.
"இன்று மழை வருமா?" என்று மனு கேட்டான் .
"இல்லை, மனு இன்று வராது. நீ இன்று மழை கோட் போட்டால் பார்க்க வேடிக்கையாக இருக்கும்" என்று அம்மா கூறினாள்.
செவ்வாய் கிழமை வானம் நீல நிறமாக இருந்தது.
"அம்மா என்னுடைய ஆசை எப்பொழுது நிறைவேறும்?" என்றான் மனு.
"இன்று இல்லை மனு, வானத்தில் ஒரே ஒரு வெண்மேகம் தான் உள்ளது." என்றாள் அம்மா.
புதன் கிழமை அதிக வெயிலாக இருந்தது.
மனு : "அம்மா, இன்று மழை வருமா?"
அம்மா: "செல்லம், இன்று மழை வரும் என்று நினைக்கிறன். நண்பகலுக்கு முன்பே வர வாய்ப்பு இருக்கு".
வியாழனன்று மனு சுற்றுலாவிற்கு போனான்.
மனு : " அம்மா, ஓருவேளை மழை பெய்தால்? நான் மழை கோட் எடுத்து வரவா?"
அம்மா: " " இல்லை, என் செல்லம் , இன்று மழை வராது. சிறு வெள்ளை மேகங்களும் வானத்தில் வெகு உயரத்தில் உள்ளது."
வெள்ளியன்று மேகமூட்டமாக இருந்தது.
மனு சத்தமாக: "அம்மா, இன்று மழை வருமா?"
சனிக்கிழமை இடியுடன் தொடங்கியது.
"அம்மா, இடியா இடித்தது? இன்னும் கொஞ்சம் நேரத்தில் மழை வருமா?"
கடைசியாக மழை பொழிந்தது.
" ஐ..... மழை வருது ....மழை வருது...." மனு கத்திகொண்டே ஓடினான்.
"ஆனால்... மனு...."
" உன்னுடய மழை கோட்” என்று அம்மா கத்திக்கொண்டே ஓடினாள்.