மாயக் கண்ணாடி ஒன்று
எனது கையில் இன்று
எந்த மிருகம் காண ஆசை?
பாரு குனிந்து நின்று!
கடலில் வாழும் திமிங்கிலம்
குதித்துக் காட்டும் குதூகலம்
காட்டில் வாழும் குரங்குகள்
நம்மைப் போன்றே கை விரல்
தோகை விரித்துப் பறக்கவே
பனியில்
பதுங்கிப்
பாயவே
உலகை
ரசித்துப்
பார்க்கவே...
மாயக்
கண்ணாடி
போதுமே!