mazhai vidhai

மழை விதை

ஒரு ஊர்ல மழை பெய்யாதனால, ஒரு இளைஞர் கூட்டம் தண்ணிய தேடி போனது அதில் ஒருவன் மழை விதையை கொண்டு வருகிறான் .

- Bala A

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஒரு ஊர்ல  மூனு வர்ஷமா மழையே பெய்யாம  இருந்துச்சாம்.

பூமி வறண்டு பொய் செடி எல்லாம் வாடி பொய் இருந்துச்சு. எல்லாருக்கும் ஒரே கவலை தண்ணி இல்லாம எப்படி வாழ முடியும்னு.

அந்த ஊர் தலைவர் எல்லாரையும் கூப்பிட்டு ஒரு கூட்டம் போட்டாரு. சிறியவர் பெரியவர் எல்லாரும் வந்தாங்க

அந்த தலைவர் ஒரு நாலு இளைஞர்களை கூப்டு, "நீங்க 4 பேரும் நாலு பக்கமா போய் தண்ணி எங்க இருக்குனு கண்டுபிடிங்க" னு சொன்னாரு.

அதுல மூணு பேர் தண்ணிய கண்டு பிடிக்க முடியலன்னு கொஞ்ச நாள்ளயே திரும்ப வந்துட்டாங்க. வடக்கு பக்கம் போன நாலாவது ஆள் மட்டும் ஒரு வெள்ளை மலையை பாத்து அங்க போனான்.

அந்த மலை ரொம்ப வழுக்கி விட்டாலும் மேல மேல ஏறி போனான். அங்க ஒரு குகை இருந்துச்சு. அதுக்குள்ள ஒரு வயசான பாட்டி இருந்தாங்க. அவங்ககிட்ட "இங்க தண்ணி எங்க கிடைக்கும் பாட்டி" அப்டினு கேட்டான்

அதுக்கு அந்த பாட்டி "இன்னும் மேல ஏறி போ" அப்டினு சொன்னாங்க

அந்த மலை உச்சி வரைக்கும் போன அவன் அங்க இருந்து ஒரு கல்ல ஒடச்சு எடுத்தான் அந்த கல்ல எடுத்துட்டு ஒரு சாக்கு குள்ள போட்டு வேகமா ஊருக்கு திரும்ப ஓடுனான்.

அவனை பாத்ததும் ஊர் மக்கள் எல்லாம் அவன் என்ன கொண்டு வந்திருக்கான் னு பாக்க ரொம்ப ஆவலா இருந்தாங்க. ரொம்ப சந்தோஷமா அவன் கொண்டு வந்த சாக்கை தொறந்து   எடுத்து காமிச்சான். இது தான் தண்ணீர் விதை - இதுலேருந்து தான் தண்ணி வரும்னு சொன்னான்

ஆனா அவன் சாக்க தொறந்ததும் வச்சிருந்த ஐஸ் கட்டி உறுகி தண்ணியா கீழ விழுந்து மண்ணோட மண் ஆயிருச்சு

கீழ விழுந்த தண்ணிய கண்டு புடிக்க ஊர் மக்கள் எல்லாம் வேக வேகமா மண்ண தோண்ட ஆரம்பிச்சாங்க. ரொம்ப ஆழமா தோண்ட தோண்ட கடைசியா தண்ணி வந்திருச்சு.

தண்ணிய பாத்ததும் எல்லாருக்கும் ஒரே சந்தோஷம். தண்ணீர் விதை நமக்கு தண்ணிய குடுத்ருச்சுனு ரொம்ப கொண்டாடுநாங்க

கெடச்ச தண்ணிய நல்லா பாத்துக்கிட்டாங்க. மழை வரலேன்னாலும் அவங்களுக்கு தண்ணி எப்பயும் கிடைக்குது இப்ப.