mazhaiyil serndhu paadalaam

மழையில் சேர்ந்து பாடலாம்

சுக்கைய்யா தாத்தாவின் இனிமையான பாடல் எல்லோருக்கும் பிடித்தது. தீனுவிற்கோ பாட்டு பாட ஆசை. இருவரும் சேர்ந்தால் ... ?

- Anusha Rajagopalan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

சுக்கைய்யா தாத்தா பிதௌனா என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்தார் .

பிதௌனா கிராமம் இனிமையான பாடகர்களுக்காக பெருமை பெற்றது .

எந்த ஊர் திருவிழாவிலும் சுக்கைய்யா தாத்தாவின் இனிமையான பாடல்  இல்லாமல் இருக்காது.

இன்று அவரை ஜலோரா கிராமத்திற்கு பாட அழைத்திருந்தார்கள்.

சுக்கைய்யா தாத்தா தன் மீசையை முறுக்கிக்கொண்டு கிளம்பினார்.

வழியில் கல்யாணி ராகத்தில் ஒரு பாட்டு பாடினார்.

திடீரென தப்ப  தப்  தப்ப  தப்! என சத்தம் கேட்டது.

இந்த பாட்டுக்கு யார் தாளம் போடுவது ?

தீனு எனும் டைனோசர் அவர் பாட்டை கேட்க  ஓடி வந்தது!

அதை பார்த்து சுக்கைய்யா தாத்தாவிற்க்கு பெரும் மகிழ்ச்சி.

பின்ன ! இவ்வளவு பெரிய ரசிகன் எல்லா நாளும் கிடைக்குமா ?

“வா மழை மேகமே வா… தூறல் போடு வா!”

இந்த பாடலை கேட்காமல் போகுமா மேகம் ?

மின்னல் மின்ன, காற்று வீச, கார்மேகங்கள் கூடி வந்தன !

சுக்கைய்யா தாத்தாவும் தீனுவும் சந்தோஷத்தில் சிரித்தன.

மழை வந்ததும், சுக்கைய்யா தாத்தாவும், தீனுவும் ஒரே குடையை பகிர்ந்தனர் .

அப்புறம் அவர்கள் சூடான வடை சாப்பிட ஜலோராவை நோக்கி பாடிக்கொண்டே சென்றனர்

"ஓ நன்றி மேகமே ... ஓ நன்றி மழையே ...ஓ லா ...ல ...லா ! “

இனிய வாசகர்களே,

நீங்கள் டைனோசர்களை பார்த்துள்ளீர்களா?

டைனோசர்கள் பாட்டு பாடும் என்று நினைக்கிறீர்களா?

மழையில் உங்களுக்கு என்ன செய்ய பிடிக்கும்?

மழை பெய்யும்பொழுது என்னென்ன சாப்பிட பிடிக்கும்?

#6FrameStoryChallenge:A Carnival of Art

The illustrations in this book were created as part of the #6FrameStoryChallenge, an online campaign run by Pratham Books to build a rich bank of illustrations for StoryWeaver. The essence of the #6FrameStoryChallenge was to tell a good story using just 6 illustrations.

The campaign inspired nearly 70 illustrators to donate their time and skills to India’s first open-source story-publishing platform for children. What started out as an experimental campaign soon blossomed into a carnival of art, birthing nearly 500 new illustrations.

These wordless narratives cut across language barriers, opening up a world of possibilities, encouraging StoryWeaver’s growing community to dream up multiple stories around these images. The #6FrameStoryChallenge is a powerful reminder of the need for collaboration, to get closer to our mission: “A Book in Every Child’s Hand.”